வாசிப்பு அனுபவம் - 52: நூல் : எனக்குரிய இடம் எங்கே? ஆசிரியர் : ச. மாடசாமி வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 128 விலை : ₹. 100 *"யோசனைகளுக்குப் பஞ்சமில்லை. தினசரி உதித்தபடி இருக்கின்றன. யோசனைகளின் வடிகாலாக பேச்சு இருக்கிறது. ஏமாளிக் காதுகள் கிடைத்து விட்டால் நிற்காத பேச்சு! பேசிப் பேசியே பல யோசனைகளைக் கரைத்தாயிற்று.* *யோசனைகள் பேச்சைத் தாண்டி செயல் வடிவம் பெறுவது என்னைப் பொறுத்தவரை அபூர்வமாக இருக்கிறது."* என்ற அற்புதமான முன்னுரையுடன் ஆரம்பமாகிறது திரு. ச. மாடசாமி அய்யா அவர்களின் இந்த *"எனக்குரிய இடம் எங்கே?"* நூல். பள்ளி மாணவர்களின் சில செய்கைகளால் மனம் நோகும் தருணங்களில் இந்நூலை வாசிக்கும் ஆசிரிய பெருமக்கள் நிச்சயமாய் மாணவர்களின் உள்ளங்களை அறிந்து எளிதாய் வகுப்பினை வழிநடத்துவர் என்பது உறுதி. அள்ள அள்ளக் குறையா அமுத சுரபியாய் இந்நூலில் நாம் கற்றுத் தெளிய ஏராளம் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. *"அட, போய்யா! வகுப்பறை என்ன நீங்க முதல் போட்டு நடத்துற பெட்டிக்கடையா? நீங்க நெனக்கிற படியே அதுவும் இருக்க! நீங்க போற வழியிலேயே மாணவர்களும் கண்ணக் க...