தேவமலர் -வாசிப்பு அனுபவம்
வாசிப்பு அனுபவம் - 73
நூல் : தேவ மலர்
ஆசிரியர் : ஸெல்மா லாகர்லெவ்
தமிழில் : க.நா.சு.
பக்கங்கள் : 48
விலை :
பதிப்பகம் : காலச்சுவடு
காகிதத்தில் படிக்காமல் முதன் முதலாய் கைபேசி திரையில் வாசித்த புத்தகம். பொதுவாகவே, காகிதத்தாள் தவிர்த்து கைபேசியிலோ,மற்ற கணினி போன்ற திரைகளில் படிப்பதிலோ அதீத ஆர்வமோ, ஈடுபாடோ என்றைக்கும் இருந்ததில்லை. ஆயினும் வேறு வழியின்றியே, வாசிக்காமல் இருப்பதை விடவும் வேறென்ன மனச்சோர்வு இருந்துவிடப் போகிறது என்ற எண்ணத்தில் தான் இன்று "தேவமலர்" குறுநாவலை வாசிக்க ஆரம்பித்தது.
மிகச்சிறிய நாவல் தான். ஆயினும், படிக்கவும், பகிரவும் தன்னளவில் நிறைய பாடங்களைக் கொண்டுள்ளது "தேவமலர்".
நாவலின் சுருக்கம் இதுதான்...
ஒரு பலே திருடன் தன் மனைவியுடனும், ஐந்து குழந்தைகளுடனும் கீயிங்கே என்ற காட்டில் வாழ்ந்து வருகிறான். அக்காட்டின் வழியே வரும் வழிப்போக்கர்களிடம் கொள்ளையடிப்பதே அவனது பிழைப்பு. ஒரு கட்டத்தில் அவன் மீதான திருட்டு பயத்தினால் அக்காட்டு வழியே மக்கள் யாருமே வராத போது அவனது மனைவியும், பிள்ளைகளும் ஊருக்குள் பிச்சையெடுக்க வருகின்றனர். பயங்கரமான திருடனின் மனைவி என்பதால் அவன் மீதான பயத்தினில் மக்களும் பிச்சையளிக்கின்றனர். இப்படி இருக்கையில் அந்த ஊர் மடத்தின் உள்ளே நுழையும் அவள் அங்கிருக்கும் அழகிய மலர்த் தோட்டதின் அழகினை ரசிக்கையில் மடத்தினைச் சேர்ந்த சிஷ்யர்களில் ஒருவன் அவளை வெளியில் துரத்த எத்தனிக்கையில், முரண்டு பிடித்து மறுக்கிறாள். அப்போது மடாலயத்தின் அதிபதியும் அம்மலர்த் தோட்டத்தினை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியவருமான அப்பட்ஹான்ஸ் அவள் ரசிப்பதைப் பார்த்து வியந்து அவளுடன் பேச்சுக் கொடுக்க அவள் இதைவிட மிகச் சிறந்த கண்கொள்ளா மலர்த்தோட்டக் காட்சியினை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாள் இரவில் தாமும் தன் குடும்பத்தினரும் தாங்கள் வாழும் காட்டில் காண்பதாய் கூறுகையில் அப்பட்ஹான்ஸும், சீடரும் நம்ப மறுக்கின்றனர். எனினும் வரும் கிறஸ்துமஸ் அன்று தன்னை அக்காட்சியினைக் காண அழைத்துச் செல்ல அப்பட்ஹான்ஸ் இறைஞ்சுகிறார்.
திருடனின் மனைவியும் அப்பட்ஹான்ஸாலோ, அவரைச் சார்ந்தாராலோ தனக்கும், தன் குடும்பத்திற்கும் எவ்வித இடையூறும் நேராது என்று சத்தியம் வாங்கிய பின், அன்றைய தினம் அவரை அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டு தன் மகனை அனுப்புவதாய் கூறிச் செல்கிறாள்.
இதற்கிடையில் திருடன் மேல் இரக்கம் கொள்ளும் அப்பட்ஹான்ஸ் ஆர்ச் பிஷப் அப்ஸ்லனிடம் திருடனுக்கு மன்னிப்பு வழங்கும்படியும், அவனால் இனி நாட்டு மக்களுக்கு எவ்வித தீங்கும் நேராமல் காக்க தான் பொறுப்பு என்றும் கூறுகிறார். மேலும், பேச்சு மும்முரத்தில் கீயிங்கே காட்டைப் பற்றியும், அங்கு ஒவ்வொரு மாரியிலும் கிறிஸ்துமஸ் சமயத்தில் வசந்தம் விளையாடுவதையும் கூறுகிறார். ஆனால் இதனை நம்ப மறுக்கும் பிஷப் அப்படியாயின், இங்கெல்லாம் பனி சூந்திருக்கையில் கிறிஸ்துமஸ் சமயத்தில் அத்திருடன் குகையில் பூப்பதாய் தாங்கள் கூறும் வஸந்த மலர்களில் ஒன்றினைப் பறித்து வந்தீர்களாயின் அத்திருடனை மன்னித்து சாதாரண மனிதனாய் மக்களோடு மக்களாய் நடமாட நான் வாய்ப்பளிக்கிறேன் என்று கூறிச் செல்கிறார்.
அப்பட்ஹான்ஸ் கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினம் அங்கு சென்றாரா? திருடனின் மனைவி கூறியதைப் போல - இவர்கள் யாரும் இன்றுவரை காணாத வெறும் கற்பனையென்று மட்டுமே எண்ணியிருந்த கிறிஸ்துவின் பிறப்பினை அறிவிக்கும் விதமாய் வண்ணமயமாய் வசந்தம் பூப்பதினை கண்டு வியந்தாரா? தேவமலரினைக் கொண்டு வந்தாரா?(இதுதான் கதையின் மிக முக்கியமான பகுதி) திருடனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதா? என்பதெல்லாம் கதையின் மீதி.....
ஒரு முக்கால் மணி நேரத்தில் வாசித்து விடக்கூடிய நாவல் தான். ஆயினும் பல்வேறு சிந்தனைகளையும்,கேள்விகளையும் நம்முள்ளே ஊன்றிச் செல்கிறது கதை.
கடவுளின் - கடவுளாய் அவர்கள் நினைக்கும் உருவத்தின் அருகிருந்து ஊழியும் செய்வதாய் கூறும் பாதிரிகள் கூட கடவுள் கதைகளாய் கூறப்பட்டவற்றை கற்பனையென்றே தமக்குள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அவர்களுக்கும் கடவுள் மீதெல்லாம் பெரிய அளவில் நம்பிக்கை இருப்பதாய் தோன்றவில்லை என்பதே இக்கதையினை வாசிக்கையில் உணர முடிகிறது.
யோசித்துப் பாருங்களேன்.... கடவுளை நம்பும் எத்தனை பேர் "என் எதிரில் கடவுள் வந்தார்" என்று சொன்னால் நம்புவார்கள்? அதுவே இக்கதையிலும் நிகழ்கிறது. அதுவும் தேவதூதர்கள் நெருங்கி வருகையிலும் இதுவும் சைத்தானின் விளையாட்டு என்றே சிஷ்யனின் மனம் நம்ப மறுக்கிறது.
நம்மில் கூட பலரும் இதே மனநிலை கொண்டோர் தானே? ஒரு மகிழ்வான - மிகுந்த மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் அதிகமாய் சிரிக்கையிலும், அய்யோ இத்தனை சிரிப்பினை அடுத்து எவ்வளவு பெரிய சோகம் வரப்போகிறதோ என்று புலம்பி நிம்மதியாய் சிரிக்கக் கூட யோசிப்போரை தினம் காணத்தானே செய்கிறோம்.....
அத்தோடு கடவுளின் அருகேயிருந்து தினம் துதிப்போருக்கு மட்டும் தான் கடவுள் அருள் கிடைக்கும் என்பதெல்லாம் இல்லை. சாமானியருக்கும் அவர் கடவுள் தான் நீங்கள் இடைத்தரகர்களை நாடாவிடினும்..... எனும் கருத்தினையும் ஆழ உறைக்கிறது ஸெல்மா லாகர்லெவ்வின் தேவமலர்.
மேலும், நாவலில் எனை மிகவும் கவர்ந்த இடமொன்று உண்டு. அது.....
கிற்ஸ்துமசுக்கு முந்தைய நாள் இரவில் வசந்தம் பூக்கும் அழகினை ஆசிரியர் வர்ணிக்கும் பகுதி..... நம் கண் முன்னே ஒரு பூக்காடே மின்னி நம் மனம் முழுதும் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சும் பக்கங்கள் அவை. வாசித்துப் பாருங்கள். உங்களுக்குள்ளும் ஒரு மின்மினிக்காடு ஒளிரும், அமுதகானம் இசைக்கும் ஓசையை கேட்பீர்கள்.
தாங்க இயலா துயரினிலும் உங்களிடம் ஒரு புத்தகம் இருந்துவிட்டால் போதும் ஆற்றாமையில் அழத்துடிக்கும் உங்களின் ஆழ்மன வேதனைக்கு மருந்திட......
வாசியுங்கள்..... வானம் வசப்படுகிறதோ இல்லையோ உங்களின் சோகத்திற்கெல்லாம் வடிகாலாய் நிச்சயம் வாசிப்பே அமையும்.....
வாசிப்பும், பகிர்வும்....
ஜெ. திவாகர்,
05/12/2019

Comments
Post a Comment