Posts

Showing posts from December, 2020

125-பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்

Image
 வாசிப்பு அனுபவம் - 125 நூல் : பிள்ளையாருக்குப் பின்னே மர்மம் ஆசிரியர் : சத்யஜித்ரே வெளியீடு : Books for Children பக்கங்கள் : 120 விலை : ரூ. 80 சத்யஜித்ரே - TNPSC தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருந்த தருணத்தில் பொது அறிவு பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்காக படித்த பெயர் இது. அவருடைய முதல் திரைப்படமான பதேர் பாஞ்சாலி பல விருதுகளைப் பெற்றது என்ற வகையில் தான் சத்யஜித்ரே என்ற பெயரைத் தெரியும். ஆனால், ”பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்” என்ற இந்நூலின் முன்னுரையை வாசிக்கையில் தான், அவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்ல, ஓவியர், எழுத்தாளர், மிகச் சிறந்த துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் வித்தகர் என்பதையெல்லாம் அறிய முடிந்தது.  பொதுவாகவே சத்யஜித்ரே-வின் துப்பறியும் கதைகளின் நாயகன் - ஃபெலுடா. ஆனால், நாவல் முழுவதும் ஃபெலுடாவின் ஒன்றுவிட்ட சகோதரனான தபேஷ் சொல்வது போல தான் எழுதியிருப்பார். இந்நாவலும் ஃபெலுடாவின் துப்பறியும் நாவல் வகையைச் சார்ந்தது தான். ஃபெலுடா , தபேஷ் மற்றும் துப்பறியும் நாவல் எழுதுபவரான ஜடாயு என்கிற லால்மோகன் பாபு மூவரும் துர்கா பூஜையைக் காண்பதற்காக...

என்னுயிரும் நீயல்லவோ - 124

வாசிப்பு அனுபவம் - 124 நூல் : என்னுயிரும் நீயல்லவோ ஆசிரியர் : பாலகுமாரன் வெளியீடு : விசா பப்ளிகேஷன்ஸ் பக்கங்கள் : 384 விலை : ரூ. 250 *இந்த 2020 ஆம் ஆண்டில் நான் வாசித்து பதிவெழுதும் ஐம்பதாவது புத்தகம் இது.* மேலும், என் மனைவி எனக்கு அன்பளிப்பாய் வழங்கிய நூலுமாகையால் இந்நூலை வாசிக்கத் தொடங்கையிலேயே உள்ளுக்குள் ஒரு இனம்தெரியா ஒரு புத்துணர்ச்சி.😊 நூலின் தலைப்பும் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாய் இருந்தது. நாவலும் அத்தகைய தன்மை வாய்ந்ததே. நூலானது, என்னுயிரும் நீயல்லவோ, அடுக்கு மல்லி, நீ பௌர்ணமி ஆகிய மூன்று நாவல்களைக் கொண்டது. நாற்பது வயதான நாச்சியப்ப செட்டியார் பதினெட்டு வயதேயான பகவதியை இரண்டாந்தாரமாய் திருமணம் செய்து கொண்டு கேரள எல்லையில் இருக்கும் போடிமேட்டில் தனது ஏலக்காய் தோட்டத்திற்கு அழைத்து வருவது முதல் தொடங்குகிறது நாவல். நாச்சியப்பனின் முதல் மனைவியான ஆச்சிக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லையாகினும், கணவனுக்காக ஒப்புக்கொண்டாள். பகவதிக்கும், ஆச்சிக்கும் அதிகமாய் தொடர்பில்லையெனினும் ஆச்சியின் உயர்குணம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. மனிதர்களில் அனைவரையும் அனுசரித்து...

நெடுங்குருதி - 123

Image
 வாசிப்பு அனுபவம் - 123 நூல் : நெடுங்குருதி ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 472 விலை : ரூ. 500 பசுபதி மே.பா. ராசாக்காப்பாளையம் என்றொரு தமிழ் திரைப்படம். அதிலொரு காட்சியில், பசுபதியின் அம்மா விவேக்கின் கையில் ஒரு பெரிய களி உருண்டையைக் கொடுத்ததும் ”இதை எங்கேயிருந்து சாப்பிட ஆரம்பிப்பது?” என்று கேட்பார். அண்ணே, இப்படி சாப்பிடணுமாக்கும் என்று பசுபதி சொல்லிக் காட்டிய பின் விவேக் சாப்பிட்டதும் அதன் ருசியின் அவரையறியாமல் கண்கலங்கிப் போவார். அதுபோல் தான் ஆறாண்டுகளுக்கு முன்  திரு. எஸ்.ரா. அவர்களின் நெடுங்குருதி என்ற இந்நூலை மேல் அட்டை இல்லாமல் சென்னையின் ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கிய போது எஸ்.ரா. அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது. இவ்வளவு தடிமனான புத்தகம் 50 ரூபாய்க்கு கிடைக்கிறதே என்று வாங்கியது தான். வாசிப்பின் ஆரம்ப வாயிலில் இருந்த நாட்கள் அவை. எவை சலிப்பேற்படுத்தாமல் வாசிக்க ஏற்றவை? சிறுகதைகளா? நாவலா? கவிதைகளா? முதலில் இவ்வாறெல்லாம் வகைகள் இருக்கின்றன என்றும் கூட சரியாய் தெரியாத ஆரம்ப நிலையது.  ஆனால், முதன் மு...