Posts

Showing posts from April, 2020

மதில்கள் - வாசிப்பு அனுபவம் 95

Image
வாசிப்பு அனுபவம் - 95 நூல் : மதில்கள் ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள் : 71 விலை : ரூ. 90        பொதுவாகவே வைக்கம் முகம்மது பஷீரின் எழுத்துக்களை வாசிப்பதென்பது வெல்லப் பானைக்குள் கைவிடுவதைப் போன்றது. வெல்லத்தில் கை தொட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகும் கை இனிப்பதை போன்றே, பஷீரின் எழுத்துக்களை வாசித்த பிறகும் நிரந்தரமாய் ஒரு மகிழ்ச்சி உள்ளத்தில் தங்கிவிடும்.              மலையாள புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாக திகழ்ந்தவர் வைக்கம் முகம்மது பஷீர்.  அவர் எழுதிய ஒரு மகத்தான காதல் சித்திரம்தான் *"மதில்கள்"* இதை காதல் காவியம் என்று கூறுவதா; வரலாற்றின் அடிப்படையில் புனையப்பட்ட நாவல் என்பதா; அல்லது ஒரு சிறைவாசியின் சிறையனுபவம் என்று எடுத்துக் கொள்வதா? எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் அனைத்திற்கும் இந்த நாவல் பொருத்தமானதாகவே இருக்கிறது.               ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் கைதியாய் சிறைக்கு வரும் பஷீர் அங்கு நடக்கும்...

உயிரே உயிரே - வாசிப்பு அனுபவம் 94

Image
வாசிப்பு அனுபவம் - 94 நூல் : உயிரே உயிரே ஆசிரியர் : மாலன் வெளியீடு : புதிய தலைமுறை பக்கங்கள் : 168 விலை : ரூ. 160 வாழ்வெனும் பெருங்கடலில் சிக்கித் தவித்து ராட்சச அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு கரை தெரியாது கலங்கி நிற்கும் மானிடருக்கு கலங்கரை விளக்கமாய் விளங்குவது  - காதல் சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடுகள் எல்லாம் கடந்து அனைவரும் தொழும் ஒரே கடவுள் ஏதாவது உண்டா என்று யாரேனும் கேட்பார்களெனில் கண்ணை மூடிக்கொண்டு கூறலாம் அந்த கடவுள் -  காதல் தானென்று. உலகம் தோன்றிய நாள் முதலாய் உலகில் பல விஷயங்கள் காலமாற்றத்திற்கு உட்பட்டு மாறி  வந்திருக்கிறது. ஆனால் இந்த காதல் மட்டும், உலகில் தான் தோன்றிய நாள் முதலாய் மாறாதிருக்கும் கரப்பான் பூச்சியைப் போல் அனைவருக்குள்ளும் வெளிப்படையாயும்,  மறைந்தும் இன்று வரை நீடித்து உயிர் வாழ்ந்து வருகிறது. வரலாற்றில் நாம் வாசிக்கும் ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காதல் இருக்கிறது.  அரசர்களின் புற வாழ்க்கை பேசப்பட்ட அளவிற்கு அவர்களின் அகம் பேசப்பட்டது இல்லை. ஒருவேளை அவர்களி...

சர்க்யூட் தமிழன் - வாசிப்பு அனுபவம் 93

Image
வாசிப்பு அனுபவம் - 93 நூல் : சர்க்யூட் தமிழன் ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராஜன் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 125 விலை : ரூ. 100          நூலைப் பற்றி கூறுவதற்கு முன் இந்நூலின் ஆசிரியரைப்பற்றி - திரு ஆயிஷா நடராசன் அவர்களைப் பற்றி நான் கூறவில்லை எனில் எனது இந்தக் கட்டுரை ஒரு முழுமையானதாக இருக்காது என்றே கருதுகிறேன். காரணம் 2012ல் ஆசிரியராக பணியில் சேர்ந்த பொழுது நான் செல்லும் புத்தகத்  திருவிழாக்களில் எல்லாம் தேடித்தேடி அலைந்து வாங்கிய புத்தகங்கள் அவருடையவை.          அதுவும் ஒரு சென்னை புத்தகத் திருவிழாவில் இவர் என்னை கடந்து சென்ற பொழுது அதையே ஒரு பெரிய விஷயமாக - "நான் ஆயிஷா நடராசன் அவர்களைப் பார்த்தேன் தெரியுமா?" என்று எனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்ட மகிழ்வான நாட்கள் நினைவில் ஆடுகின்றன. ஏனெனில் நூலாசிரியர்கள் வாசகர்களிடம் சகஜமாக பேசுவார்கள் என்பதை எல்லாம் நான் உணராத காலம் அது.          ஆயிஷா நடராசன் அவர்கள் சிறுவர் இலக்கியத்திற்காக *"பால சாகித்ய அகாடமி"* விருது பெ...

ஓர் இரவு - வாசிப்பு அனுபவம் 92

Image
வாசிப்பு அனுபவம் : 92 நூல் : ஓர் இரவு ஆசிரியர் : அறிஞர் அண்ணா வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ் பக்கங்கள் : 104  விலை : ரூ. 40 பேரறிஞர் அண்ணா அவர்களால் ஒரே இரவில் எழுதப்பட்ட நாடகம் *"ஓர் இரவு."* இந்நாடகத்தின் கதையும் கூட ஒரே இரவில் நடப்பது என்பது தான் நூலின் சிறப்பு. இந்நாடகம் பின்னர் அறிஞர் அண்ணா அவர்களின் கதை வசனத்தோடு திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. நாடகமானது, மிக ரம்மியமான மனம் மயக்கும் ஒரு முழு நிலவு நாளில் நடக்கிறது.  ஒரு பெண்ணும் அவளது கணவனும் ஒரு முழு நிலவு நாளில் மகிழ்ச்சியாய் பேசிக்கொண்டிருப்பதில் இருந்து நாடகம் தொடங்குகிறது. ஆனால் இந்த முழு நிலவானது எல்லோருக்கும் ஒரே மாதிரியான மகிழ்ச்சியை தருவதாக அமைவது இல்லை அல்லவா? ஆம்.... மனதால் ஒன்று சேர்ந்த காதலர்களுக்கு இந்த நிலவு இன்பம் கொடுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான பொன்னிலவாய் அமைவது போலவே, பிரிந்த காதலர்களுக்கு அதே நிலவு சோகத்தை மேலும் கூட்டும் ஒரு தீப்போல் சுடும் நிலவாயும் அமைந்து விடுவதும் உண்டு தானே. அதுபோலவேதான், இரண்டு வெவ்வேறான நிகழ்ச்சிகளை அடுத்தடுத்த காட்சிகளில் அண்ணா அறிமுகப்படுத்துகிறார். ...

கனலி இணைய இதழ் - வாசிப்பு அனுபவம் 91

Image
வாசிப்பு அனுபவம்  - 91 நூல் : கனலி இணைய இலக்கிய இதழ் மார்ச் 2020 ஆசிரியர் : கனலி ஆசிரியர் குழு வெளியீடு : கனலி இணையதளம் பக்கங்கள் : விலை : இலவசம் இதுவரையிலான எனது வாசிப்பு அனுபவக் கட்டுரைகளில் இது சற்றே வித்தியாசமான ஒரு கட்டுரை. இதுவரை நான் எழுதிய வாசிப்பு அனுபவங்கள் அனைத்தும் நூல்களை வாசித்து நான் ரசித்தவற்றை பதிவு செய்தவை.  ஆனால் இது ஓரு மாத இதழ் பற்றிய வாசிப்பு அனுபவம். அதுவும் இலக்கிய இணைய இதழ் பற்றிய வாசிப்பு அனுபவம். இலக்கிய உலகில் நாள்தோறும் பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் தற்காலச் சூழ்நிலையில் முன்னணியில் இருப்பது இலக்கிய இணைய இதழ்கள். அந்த வகையில் கனலி என்ற இணையதளம் பல்வேறு வகையான புதுமைகளையும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் மாதந்தோறும் ஓர் இணைய இதழாக தங்களது இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.  அதில் நான் வாசித்த கனலி இலக்கிய இணைய இதழ் மார்ச்  2020 பற்றி தான் இந்த வாசிப்பு அனுபவத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். முதலில், *"சந்திரா தங்கராஜ்"* அவர்களின் கவிதைகளை பற்றி.... ...

வேடிக்கை பார்ப்பவன் - வாசிப்பு அனுபவம் 90

Image
வாசிப்பு அனுபவம் - 90 நூல் : வேடிக்கை பார்ப்பவன் ஆசிரியர் : நா. முத்துக்குமார் வெளியீடு : விகடன் பிரசுரம் பக்கங்கள் : 240 விலை : ரூ. 140 நா. முத்துக்குமார் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தோடு தொடங்குகிறது இந்நூலின் முதல்  அத்தியாயம். இரண்டாம் அத்தியாயம், இவ்வாறு ஆரம்பிக்கிறது: *"ஒரு மிகப்பெரிய பொருட்காட்சி சாலையாக இந்த பிரபஞ்சத்தையும், அதை வேடிக்கை பார்த்தபடி வழி தப்பிய சிறுவனாக தன்னையும் இவன் அடிக்கடி கற்பனை செய்து கொள்வான்"* இது அவரது வாழ்க்கையை பற்றி கூறுவதற்காக அவர் தொடங்குகிறார். ஆனால் நமக்கோ இந்த நூலை வாசிக்கையில் இந்த நூலே நமக்கு ஒரு பெரிய பிரபஞ்சமாகவும் நாம் அதை எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு சிறுவனுமாகவே மாறிப் போகிறோம். நூலில் அத்தனை தகவல்கள். இது ஏதோ ஒரு தனிப்பட்ட நா. முத்துக்குமார் என்ற ஒரு மனிதனுடைய - ஒரு கவிஞனுடைய - ஒரு பாடலாசியருடைய வாழ்க்கை நிகழ்வுகளாக மாத்திரம் நம்மால் எடுத்துக்கொள்ள இயலவில்லை. இதில் வரும் வரிகள் அத்தனையும் நம் வாழ்க்கையிலும் நாமும் ஏதோ ஒரு கணத்தில் நிச்சயம் கடந்து வந்த தருணங்களாகவே இருக்கும். தனது அம்மா இறந்த பொழுது அது கூட த...

மனுசங்க - வாசிப்பு அனுபவம் 89

Image
வாசிப்பு அனுபவம் - 89 நூல் : மனுசங்க ஆசிரியர் : கி. ராஜநாராயணன் வெளியீடு : அன்னம் பதிப்பகம் பக்கங்கள் : 127 விலை : ரூ. 100 ஒரு சிறு குழந்தையினை ஐஸ்கிரீம் கடையில் விட்டுவிட்டு உனக்குத் தேவையானதை எல்லாம் எடுத்து சாப்பிடலாம் எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று கூறினால் அக்குழந்தையின் மகிழ்ச்சி எப்படி இருக்கும்.......😀 ஒரு வயதான நீரிழிவு நோயுள்ள பெரியவரிடம் இன்றைக்கு ஒரு நாள் மட்டும் நீங்கள் விரும்பியதை எல்லாம் சாப்பிடலாம் என்று மருத்துவர் கூறினால் அவரது மனநிலை எத்தனை உவப்பானதாக இருக்கும்.....😊 ஒரு இளைஞனிடம் அவன் விரும்பும் பெண் தானே முன்வந்து அவள் காதலை அவனிடம் தெரிவிக்கையில் அந்த இளைஞனின் இதயம் எத்தனை குதூகலத்தில் துள்ளிக் குதிக்கும்.......😍 அப்படித்தான் எனக்கும் திரு. கி.ரா. அவர்களின் நூலை வாசிப்பது என்பதும்...😀😊😍 பொதுவாகவே கி.ரா. அவர்களின் நூல்களில் மனிதர்களையும் அவர்களது குணாம்சங்களையும் பற்றியுமே பெரும்பாலும் பேசியிருப்பார். அதிலும் இந்நூலின் தலைப்பே *"மனுசங்க"* என்பதுதான். அப்படியாயின் இந்நூலைப் பற்றி நாம் மேலதிகமாக கூற வேறென்ன இருக்கப் போகிறது. ஆம் அதே தான்....

அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88

Image
வாசிப்பு அனுபவம் - 88 நூல் : அழகோ அழகு ஆசிரியர் : வெ. இறையன்பு வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பக்கங்கள் : 116 விலை : ₹ 60 மகுடியின் முன் மயங்கும் பாம்பினைப் போன்று திரு. வெ. இறையன்பு அவர்களின் பேச்சும், எழுத்தும் நம்மை கிறங்கடிக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தவை. தன்னம்பிக்கை சற்றே தளரும் போதெல்லாம் அவரது பேச்சைக் கேட்டு உத்வேகம் பெற்ற நாட்கள் பல உண்டு கல்லூரிக் காலங்களில். 14 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.  ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு வகையில் பேசத்தக்க சிறப்பு வாய்ந்தவை.  முதல் சிறுகதையான *"எட்டாவது மலைப் படைப் பிரிவு"* என்ற சிறுகதை ஆனது மேஜர் பிரகாஷ் ஜாவிற்கும் அவருக்கு சமையல் செய்யும் சமையல்காரரான பிரேம் சிங்கிற்கும் இடையேயான உறவைப் பற்றியது. பிரேம் சிங் தனது மனைவியின் பிரசவத்தை எதிர்நோக்கி வாரம் ஒரு கடிதம் எழுதுகிறான். மனைவியின் நிலை பற்றி சரியாய் தெரியாத தருணத்திலும் தனது பணியிலிருந்து அவனது கவனம் விலகவில்லை.  அவனது உணர்ச்சிகளை மிக அழகாக இந்நூலில் விவரித்திருப்பார் ஆசிரியர்.  எதிர்பாராத, தாங்கவியலா சோகம் பிரேம் சிங்கிற்கு ஏற்படும் பொழுது அதை ப்ரகாஷ...