மரணதண்டனை கைதியின் இறுதிநாள் - வாசிப்பு அனுபவம்
வாசிப்பு அனுபவம் : 79
நூல் : மரணதண்டனை கைதியின் இறுதி நாள்
ஆசிரியர் : விக்தோர் ஹ்யூகோ
வெளியீடு : க்ரியா
பக்கங்கள் : 112
விலை : ₹110
வகை : நாவல்
(தேவைதானா என்று தெரியாத ஒரு சிறு குறிப்பு:
வழக்கமான முறையில் இல்லாமல், ஒரு சிறு மாற்றத்துடன் இந்த என் வாசிப்பு அனுபவத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன்)
(திருமதி. தி மற்றும் திரு. க ஆகியோருக்கிடையே அவர்கள் வாசித்த புத்தகம் குறித்து நடக்கும் ஒரு சிறு உரையாடல்....)
திருமதி. தி : என்ன புக் படிச்சுகிட்டு இருக்கீங்க Mr. க?
திரு. க : விக்தோர் ஹ்யூகோவின் "மரண தண்டனைக் கைதியின் இறுதிநாள்" புத்தகம் படிக்கிறேன் Mrs. தி.
தி : மரண தண்டனை கைதியா? எப்டியும் மன்னிக்க முடியாத தப்பைத்தான் பண்ணி இருப்பான். அதான் மரணதண்டனை குடுத்து இருப்பாங்க. இதுல அவனுக்கு ஒரு கடைசி நாள் வேற..... இதை வேற ஒரு புக் ஆ போட்டு இருக்கான். நீங்களும் வேலை மெனக்கெட்டு படிச்சுகிட்டு இருக்கீங்க.....
க : இந்த புக் ல அப்டி என்ன இருக்கும்னு நீ நெனைக்குற தி.?
தி : வேறென்ன இருக்க போகுது? இறுதிநாள் ல நான் நல்லவன் என்ன இப்டி பண்ணீட்டாங்களே, அநியாயமா தண்டிச்சிட்டாங்களேனு புலம்பி இருப்பான். அதானே....
க : அதுதான் இல்ல தி.
தி : அது இல்லயா? அப்புறம் வேற என்ன?
க : அப்டி கேளு. சொல்றேன். இந்த நாவல்ல எந்த ஒரு இடத்துலயும் அவர் தன்னை விடுதலை பண்ண சொல்லி கெஞ்சல. இன்னும் சொல்லப்போனா, *மரணத்தின் முன் கோழையாகாதே* அப்டிங்கற கதாப்பாத்திரம் தான் அவர். எதாவது அதிசயம் நடந்து தன்னோட தண்டனைய நிறுத்திட மாட்டாங்களானு சில சமயம் நினைக்குறாரு அவ்ளோ தான்.
தி : அவனுக்கென்ன அவர், இவர்னு இவ்ளோ மரியாதை? அவன், இவன்னே சொல்லுங்க போதும்..
க : கரெக்ட். இதையெல்லாம் மாத்த தான் ஹ்யூகோ இந்த நாவலையே எழுதி இருக்காருனு நெனைக்குறேன். அவரும் மனிதன் தான் தி. ஏதோ சந்தர்ப்பவசத்தால தப்பு செய்து இருக்கலாம். அதுக்குனு அவர் என்னமோ மனிதப்பிறவியே இல்லைங்குற மாதிரி அவரை நடத்துறதெல்லாம் அதைவிடவும் ரொம்ப மனிதத்தன்மையே இல்லாத செயல்னு புரிய வைக்குறாரு.
தி : சரி விடுங்க. நாவல் பத்தி சொல்லுங்க.
க : மரணதண்டனை விதிக்கப்பட்டவனின் ஐந்தாவது வாரத்திலிருந்து இந்நாவல் தொடங்குகிறது. அடுத்தவாரம் மரணதண்டனை. அந்த நாளில் தொடங்கி அவரது உள்ளத்து உணர்ச்சிகளை அவரே விவரிப்பது போன்று நாவல் செல்கிறது. அந்த ஒவ்வொரு நொடியும் மனதளவில் அவர் படும் வேதனை. அப்பப்பா. மரணத்தை விட கொடியது அது. அவருக்கிருக்கும் ஒரே ஆறுதல் அவரது பழைய நினைவுகள் மட்டுமே. பழைய நினைவுகளே அவருக்குச் சற்று ஆறுதல் அளிக்கின்றன. ஆயினும், அவரது மனம் முழுக்க க்ரேவ் சதுக்கத்தையே (மரணதண்டனை நிறைவேற்றப்படும் இடம்) சுற்றி அலைகிறது.
தி : அப்படி என்ன குற்றம் செய்தார் அவர்?
க : அவர் செய்த குற்றத்தைப் பற்றி எந்த ஒரு இடத்திலும் நூலில் குறிப்பிடப்படவேயில்லை. ஒட்டுமொத்தமாய் மரணதண்டனையே கூடாது என்பது தான் நாவலாசிரியரின் கருத்தே தவிர குற்றத்தின் தன்மைக்கேற்ப மரணதண்டனை விதிக்கப்படலாம் என்பதாகக் கூட விவாதம் இருக்கக்கூடாது என்பதற்காகவோ என்னவோ நூலில் எங்குமே அவர் செய்த குற்றத்தைக் கூறவில்லை.
தி : ஹ்ம்ம்....
க : அத்தோடு, சிறைச்சாலையில் குற்றவாளிகள் நடத்தப்படும் விதம், அவர்களின் துயரம் என பலவற்றையும் படம்பிடித்துக் காட்டுகிறார். ஒவ்வொரு நாட்டிலும் மரணதண்டனையை நிறைவேற்ற ஒவ்வொரு முறையைக் கையாள்வர் இல்லையா? அதேபோல் இவரின் நாட்டில் கையாளும் முறையைக் கேட்டால் நீ மயக்கம் போட்டே விழுந்துடுவ தி.
தி : இல்லை இல்லை. வேண்டாம் வேண்டாம். சொல்லாதீங்க.
க : அப்புறம், சிறையின் கொடுமை பற்றி ஓரிடத்தில் இப்படி கூறுகிறார்: *"சிறை என்பது ஒரு கொடூரமான விஷயம். அங்கே ஒரு விஷம் அனைத்தையும் கெடுத்துவிடுகிறது. அங்கு அனைத்தும் வாடிவிடுகிறது. ஒரு பதினைந்து வயதுச் சிறுமியின் பாடலும் கூட! அங்கே ஒரு பறவையைக் கண்டால் அதன் சிறகின் மீது சேறு; அங்கு ஓர் அழகான பூவைப் பறித்து முகர்ந்தால், அதிலும் துர்நாற்றம்."*
தி : உண்மைதான் க. சிறையின் தன்மையை - அதன் கொடுமையை வேறு யாரும் இத்தனை எளிய வார்த்தைகளில் புரிய வைக்க இயலாது.
க : ம்ம்ம்... ஆமாம். அந்த இறுதி நாளில் மரணதண்டனை விதிக்கப்பட்டவனின் ஒவ்வொரு நொடியையும் - அவனின் மனம் படும் வேதனையையும் நம் கண் முன்னே காட்டுகிறார் ஹ்யூகோ. எத்தனை கொடுமையான தருணங்கள் தெரியுமா அவையெல்லாம்......
தி : இப்போ என்ன சொல்ல வர்றீங்க நீங்க? அப்டினா, மரணதண்டனையே கூடாதுனு சொல்றீங்களா? அவன் என்ன தப்பு வேணா பண்ணுவான். மன்னிச்சு விட்டுடணுமா?
க : உணர்ச்சிவசப்படாத தி. உன்னோட இந்த கேள்விக்கெல்லாம் பதில் இந்த புத்தகத்தைப் படிக்குறப்போ உனக்கே புரியும். அதுவும் இந்நூலோட மொழிபெயர்ப்பாளர் எழுதி இருக்கக்கூடிய பின்னுரை. நிச்சயம் அதையும் படி. நீயே ஒரு முடிவுக்கு வருவாய். அது நிச்சயம் மரணதண்டனை தேவையில்லைங்கற முடிவாகத்தான் இருக்கும்னு நான் நம்புறேன். அத்தோட சிறையில் இருக்குற எல்லாரும் கெட்டவங்க இல்லையே. அந்தக் கைதி ஓரிடத்தில் இப்படி நினைக்கிறான். *"பாதிரியாரின் அங்கியின் கீழ் உள்ளதை விட அதிகமான நல்ல எண்ணங்கள் என் கிழிந்த உடைகளுக்குக் கீழ் இருந்தன"* என்று.
தி : சரிங்க. நானும் படிக்குறேன். பாக்குறேன் இப்டி நீங்க சிலாகித்து சொல்ற அளவுக்கு அப்டி என்னதான் எழுதி இருக்காருனு.
க : நல்லது தி. சரி வா.... பசிக்குது. சாப்டுட்டு வந்து நீ படிச்ச புத்தகத்தைப் பத்தி பேசலாம்....
தி : ஹ்ம். சரிங்க.
(அவ்ளோதான்..... முடிஞ்சுது.... தி.க. இருவரும் சாப்பிட போய்ட்டாங்க.... நீங்களும் போய்ட்டு சாப்டுட்டு படிக்க ஆரம்பிச்சுடுவீங்க தானே?😀)
வாசிப்பும், பகிர்வும்
~ *திவாகர். ஜெ* ~
09/02/20

Comments
Post a Comment