Posts

Showing posts from September, 2020

117 - கலீல் ஜிப்ரானின் காதல் கடிதங்கள்

Image
 வாசிப்பு அனுபவம் - 117 நூல் : கலீல் ஜிப்ரான் ஆசிரியர் : கலீல் ஜிப்ரான் தமிழில் : மு.ந. புகழேந்தி வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பக்கங்கள் : 80 விலை : 40 கடிதம் எழுதுதல் என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்க்கப்பெறுவதில்லை. எனது சிறு வயதில், எங்கள் வீட்டில் உறவினர்களிடமிருந்து வரும் கடிதங்களை வாசற்படிக்கருகில் ஒரு வளைந்த இரும்புக் கம்பியில் குத்தி தொங்கவிட்டிருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அந்த இரும்புக் கம்பி முழுவதுமாக நிரம்பி விட்டபின் பழைய கடிதங்களை தூக்கி எறிந்து விடுவது வழக்கம். அப்படி தூக்கிப்போடும் போது முந்தைய கடிதங்களை வாசிக்கையில் அதில் எழுதியவர்களின் சுக துக்கங்கள், அழுகை, மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் வாசித்து, கடந்து வந்த பாதையை நினைத்து கலங்கியதுண்டு. இப்பொழுது நினைக்கையில் அப்பொக்கிஷங்களை சேகரித்து வைக்காமல் விட்டு விட்டோமே என்று மனம் ஏங்குகிறது.  சாதாரணமாக நலம் விசாரித்து எழுதும் கடிதங்களுக்கே மனம் இப்படி ஏங்குகிறதெனில் உலகின் கண்களை அகலத்  திறக்கச் செய்த கடிதங்கள் வரலாற்றின் கைகளில் கிடைக்காமல் போயிருந்தால்…? நிறைய உண்மைகள...

116 - தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை

Image
 வாசிப்பு அனுபவம் - 116 நூல் : தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை ஆசிரியர் : தந்தை பெரியார் வெளியீடு : திராவிடர் கழக வெளியீடு பக்கங்கள் : 30 விலை : ₹ 3           பெரியார் - இன்றைக்கு வரை இப்பெயரில் தொடங்கி இவரைப் பற்றி ஏதேனும் பேசினாலோ அல்லது பொதுத்தளத்தில் எழுதினாலோ அப்படி பேசுவோர் எழுதுவோர், உடனே மிகப்பெரிய அளவில் அதற்கான எதிர்வினையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இறந்து இத்தனை ஆண்டுகளாகியும் ஒரு மனிதனால் மக்களினத்திற்கு எதிரானோருக்கு இத்தகைய அச்சுறுத்தலை தரவியலும் என்பதற்கு பெரியாரே சாட்சி.           அத்தகைய ஒரு சமூகப் போராளியின் வரலாற்றினை - சமநீதி மறுக்கப்பட்ட மக்களுக்காகவே சிந்தித்து அவர்களுக்காகவே தன் இறுதி மூச்சு வரை சுற்றி சுழன்ற ஒரு மாமனிதனின் சுயசரிதையை 30 பக்கங்களுக்குள் அடக்கவியலுமா என்ன? ஆனாலும் அத்றகுள்ளாகவே தன் வாழ்வின் பக்கங்களை எழுதி நமக்கான வாழ்க்கையை உணர்த்துகிறார். ஏனெனில் அவர்தான் பெரியார்.            "இறுதி மூச்சு வரை" என்ற இவ்வார்த்தை ஏதோ எதுகை, மோனை நயத்திற்காக சொற்றொடரை இட்டு நிரப்ப...

115 - சிலப்பதிகாரம் - வாசிப்பு அனுபவம்

Image
 வாசிப்பு அனுபவம் - 115 நூல் : சிலப்பதிகாரம் மூல வடிவம் : இளங்கோவடிகள் நாவல் வடிவம் : கே.ஜி. ஜவர்லால் வெளியீடு : கிழக்கு பதிப்பகம் பக்கங்கள் : 135 விலை : 150         ஒரு நாவலை வாசிப்பதென்பது ஒரு புது வகையான அனுபவத்தையும் அதில் வரும் மாந்தர்களோடு நம்மையும் பொருத்திப் பார்த்து வாசித்து முடிக்கும் கணம் வரை அவர்களோடே பயணிக்க வைப்பது. அதே நேரம் ஓர் இலக்கியம் வாசிப்பதென்பது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதாவது, அம்மொழியின் - தமிழின் இலக்கண - இலக்கிய சுவையையும், மேன்மையையும், மொழியின் அழகியலையும் ரசித்துக் கொண்டே மக்களின் வாழ்வியலுக்கான வழிகாட்டுதலையும் வழங்க வல்லவை இலக்கியங்கள்.         இந்த இரு வரையறைகளும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு படைப்பு தான் கிழக்கு பதிப்பகத்தாரால் நாவல் வடிவில் வெளியிடப்பட்டிருக்கும் பழந்தமிழ் இலக்கிய படைப்புகள். நிச்சயம் இத்தகைய மாபெரும் முயற்சிக்கு பதிப்பகத்தாருக்கு நாம் நம் பாராட்டுகளைத் தெரிவித்து ஆக வேண்டும். ஏனெனில், சிலப்பதிகாரம் உள்ளிட்ட காவியங்களை பள்ளிப் பருவத்தில் ஒரு 4 மதிப்பெண் அடிமா...

மாணவர்களே எமது ஆசிரியர்கள் - ஆசிரியர் தின கவிதை

Image
மாணவர்களே எமது ஆசிரியர்கள் - கவிதை மாணவர்களே எமது ஆசிரியர்கள் - கவிதை 

114 - இந்தியாவில் சாதிகள்

Image
 வாசிப்பு அனுபவம் - 114 நூல்: இந்தியாவில் சாதிகள் ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 32 விலை :  ₹ 25      1916 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் நாள் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவரான அம்பேத்கர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை தான் "இந்தியாவில் சாதிகள்" என்ற இந்நூல்.            இக்கட்டுரையினை அவர் மூன்று பாகமாக பிரிக்கிறார். 1. சாதி முறையின் தோற்றம், 2. அமைப்பியக்கம், 3. அதன் வளர்ச்சி. ஆய்வு மாணவராக இருக்கையில் அம்பேத்கர் எழுதிய கட்டுரை என்பதால் இதில் அவரது பிந்தைய கால அரசியல் சிந்தனைகள் ஏதுமற்று முழுக்க முழுக்க ஆய்வு அடிப்படையிலான ஒரு கட்டுரையாகவே இது அமைந்துள்ளது.             சாதி குறித்து பல்வேறு அறிஞர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல விதமான ஆய்வுகள் நடத்தி இருந்தாலும் அம்பேத்கர் அவர்களின் பார்வை அவற்றிலிருந்து எல்லாம் முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.             ஆம். சாதி முறையின் தோற்றத்திற்கு அடிப்படை காரணமாக டாக்டர...