இந்த இவள் - வாசிப்பு அனுபவம்
வாசிப்பு அனுபவம் - 75
நூல் : இந்த இவள்
ஆசிரியர்: கி.ராஜநாராயணன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 199
விலை: ரூ. 175
இவ்வாண்டின் முதல் நாள் வாசிப்பு என் மனதிற்கினிய எஸ்.ரா. அல்லது கி.ரா. அவர்களின் நூல்களிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டுமென்று இருந்தேன்.... அதைப் போன்றே ஆண்டின் முதல் நாள் என் மனைவி அன்பளிப்பாக வழங்கிய கி.ரா. வின் "இந்த இவள்" நூலிலிருந்தே வாசிப்பு பயணம் தொடங்கியுள்ளது.
முதலில், இந்நூலின் சிறப்பினையும், புதுமையையும் கூறுவதுதான் சரியாக இருக்கும்.
அப்படியென்ன புதுமை என்று தானே கேட்கிறீர்கள்? நூலில் ஒரு பக்கம் ஆசிரியர் தன் கைப்பட எழுதிய நாவலின் கையெழுத்துப் பிரதியும், மறுபக்கம் அதனை தட்டச்சு செய்த பக்கமுமென மாறி மாறி உள்ளது. உண்மையிலேயே இது நாவல் என்பதனையும் தாண்டி ஒரு வரலாற்றுப் பெட்டகமாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நூல் என்றே கூறுவேன். இம்முயற்சிக்காகவே நாம் ஆசிரியரையும், நூல் வெளிவர உடன்நின்றோரையும் பாராட்ட வேண்டும்.
இதிலென்ன சிறப்பென்று கி.ரா.வினைப் பற்றி தெரியாதவர்கள் யோசிக்கலாம். (எனைக் கேட்டால் கி.ரா. வினைப் பற்றி தெரியாமல் இருப்பதே பெரிய குற்றம் என்றே கூறுவேன்) அவரது கையெழுத்துப் பிரதியினைப் பாருங்களேன்.... ஓர் எழுத்துப் பிழை இல்லை... பெரிய அளவில் அடித்தல், திருத்தல் இல்லை... ஒரு 96 வயது மனிதர் இத்தனை அழகாய்- பிழையின்றி எழுதுவது உண்மையிலேயே என்னவென்பது வரமென்பதா? அல்லது வேறேதேனுமா? இதற்காகவே கி.ரா. வின் பாதம் தொழலாம் நாம்....
இன்னும் நான் நாவலைப் பற்றிக் கூற தொடங்கவேயில்லை பாருங்களேன்.... ஏனோ நாவலை விட கி.ரா.வின் அந்த கையெழுத்தே இன்னும் என் கண்ணில் நிற்கிறது. இன்னும் 4 பக்கங்கள் கூட அதைப் பற்றி பேசலாம்.... சரி, நாவலுக்கு வருவோம்....
பூச்சம்மா என்ற ஒரு கைம்பெண் தான் இக்கதையின் நாயகி.. இந்த இவள்.... காண்போர் கிறங்கும் அழகியாய் இருந்தவள் ஒரு கிழவனுக்கு வாக்கப்பட்டு சிறுவயதிலேயே கைம்பெண் ஆனவள். நாவலின் ஓரிடத்தில் ஆசிரியர்,
*"பெண்களுக்குத் தீங்காக அமைவது போர்களும் பஞ்சங்களும் தான். அடுத்தது அவர்களுடைய சம்மதம் கேட்காமலேயே தூரத்தில் கட்டிக் கொடுத்து அனுப்பி வைத்துவிடுவது"* உண்மை. போரினை விடவும் கொடியது தானே, அவர்களின் சம்மதமின்றி திருமணம் முடிப்பது. இன்றைக்கும் தொடரும் அவலமல்லவோ இது.
'இந்த இவளின்' சமையல் ருசி ஊருக்கே பிரசித்தம். அதிலும் இந்த இவளின் சமையல் ருசி பற்றி கி.ரா. விவரிக்கும் விதம் ...... அடடா.... இதோ இப்போது உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது. இதல்லவோ ஒரு தேர்ந்த எழுத்தாளனின் எழுத்தின் வலிமை.
நாவலின் பல வரிகள் - பக்கங்கள் உங்களின் பால்யகால கிராமத்து நினைவுகளில் உங்களை புதையச் செய்து விடும்.... அதில் ஒரு வரி இது.
*"ஊரில் எல்லா வீடுகளிலும் அனேகமாக ராத்திரிகளில் சாப்பாடுதான்"* ஆம் தானே. இன்றைக்கும் பல ஊர்களில் இரவு உணவு என்றால் அது சோறும், குழம்பு, ரசமும் தான். ஏனோ நகர வாழ்க்கைக்கு வலுக்கட்டாயமாக நம்மை ஒப்படைத்துக் கொண்ட பின் தானே இரவு உணவின் வகையையே மாற்றிக் கொண்டோம் நாம்.
நாவல் நடக்கும் காலம் சர்க்கரை என்னும் ஜீனி வராத காலம். சர்க்கரையை 'வெள்ளை விஷம்' என்கிறார் ஆசிரியர்.
இந்த இவள் - மாட்டின் துயரம் கண்டு பச்சிலை பறிக்க ஓடுகையில் நம் கண் முன் ஒரு தாயாகிறாள். சிறு வயதில் தன் தோழி ராமீயுடன் சேர்ந்து போடும் ஆட்டத்தில் நம் வீட்டுக் குழந்தையுமாகிறாள். நூலில் எளிய கிராமத்து மக்களின் பலவிதமான நம்பிக்கைகளை கி.ரா. ஆவணப்படுத்தியிருக்கிறார். அதுவும் நாம் எதற்கெடுத்தாலும் மேல் நோக்கி கை காட்டுவதைக் (எல்லாம் அவன் செயல் என்பது போல) குறித்து அவர் விளக்குவதெல்லாம் மக்களின் நம்பிக்கைக்கான மரியாதை.
அதேபோல் குழந்தைகள் தட்டாம்பூச்சி பிடித்து விளையாடுவது, இந்த இவள் அய்யனார் கோவிலில் பூனைக்கு அடைக்கலம் தருவது, சாமிக்கு - புலி வாகனமாக இருப்பதற்கு காரணமாக பாட்டி கூறும் கதை என ஒவ்வொன்றிலும் என் வயதில் 20, 25 ஆண்டுகளுக்கும் மேலாய் குறைத்து எனது பால்யத்திற்கே கொண்டு சென்று விட்டார் நூலாசிரியர் கி.ரா. அவர்கள்.
ஓரிடத்தில் மடம் பற்றியும், அங்கிருக்கும் மனிதர்கள் பற்றியும் அவர் விவரிக்கும் விதம் அருமை... அதிலும் மடத்திற்கு வந்து சேர்ந்த ஒருவன் இரவு உணவு உண்ணாமல் சென்று விட்டதை எண்ணி ஊரே வருந்தும் நிகழ்வெல்லாம் உண்மையிலேயே இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்களா? இன்றைக்கும் வாழ்கிறார்களா ? என்று ஆச்சரியபடுத்தவே செய்கிறது.
இந்த இவள் நிச்சயம் ஒரு புதுமையான - போற்றிப் பாதுகாக்க வேண்டிய நூல் என்பது என் எண்ணம்.
இறுதியாக, நாவலிலிருந்து....
*"பொதுவாக, மனுச சமூகத்துக்குப் புத்தி கிடையாது; புத்தி இருந்ததில்லை எப்பவும். இருந்திருந்தால் அற நூல்கள் ஏன் இந்த அளவுக்கு?"*
பூச்சம்மாவை - இந்த இவளை - வயசான சீக்காளிக்கு கட்டி வைக்கும் போது கி.ரா. கூறும் வசனமிது. சிந்தித்துப் பாருங்கள். வார்த்தைகளின் நியாயம் புரியும்.
ஆங்ங்...... அப்புறம் மூக்குப்பொடி நாயக்கர் பற்றி நான் இன்னும் கூறவில்லையே..... சரி வேண்டாம்.... நீங்கள் புத்தகத்தை வாங்கி படிக்கையில் உங்களின் ரசனைக்காய் சில பக்கங்கள் இருக்க வேண்டுமல்லாவா? நீங்களே வாங்கி வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் மூக்குப்பொடி நாயக்கர் பற்றி....
மிகச் சிறந்த நூலினை ஆண்டின் தொடக்க நாளிலேயே வழங்கி புத்துயிர்ப்போடு இவ்வாண்டு தொடங்க காரணமாய் அமைந்த என் மனைவி திருமதி. கற்பகத்திற்கு மீண்டுமொரு முறை நன்றி....
வாசிப்பும், பகிர்வும்
~ *திவாகர். ஜெ* ~
01/01/2020

Comments
Post a Comment