வெக்கை - வாசிப்பு அனுபவம்
வாசிப்பு அனுபவம் - 72
நூல் : வெக்கை
ஆசிரியர் : பூமணி
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 175
விலை : 125
வகை : நாவல்
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீங்கள் திரும்பத் திரும்ப கேட்டும், பார்த்தும், விமர்சித்தும் மெச்சி ரசித்த ஒரு கதையைத்தான் இப்போது நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன். ஏற்கனவே உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு கதையை அறிமுகப்படுத்துவது என்பதில் மிகப் பெரிய சிரமம் உண்டு. ஆயினும் இப்போது அந்த சிரமத்தைத் தான் நான் சிரமேற்கொள்ளப் போகிறேன்.
சில கதைகளை ஒரு முறை படித்ததும் அல்லது கேட்டதும் மறந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் ஒரு சில கதைகள் தான் நாம் ஒரே முறை வாசித்தாலும் நினைவிலிருந்து தப்பாது நின்று கொண்டே இருக்கும். அத்தகையதொரு கதைதான் இந்த வெக்கை.
கதையின் மையக்கருவென்று பார்க்கப்போனால் பெரிதாக ஒன்றுமில்லை தான். அதாவது "தன் அண்ணனைக் கொலை செய்த ஒருவனை 15 வயதே நிரம்பிய அவனின் தம்பி சிதம்பரம் கொலை செய்கிறான். போலீஸிடம் சிக்கக் கூடாது என்பதற்காக அந்த பையனும் அவனது தந்தையும் தலைமறைவாய் திரிகிறார்கள்." அவ்வளவு தான் கதையின் கரு. இதில் பெரிதாய் சொல்வதற்கும், எழுதுவதற்கும், சுவாரசியமாய் விவரிப்பதற்கும் என்னவிருக்கிறது என்று தான் நமக்குத் தோன்றும். ஆனால், இதை ஒரு சிறந்த படைப்பாய் மாற்றியதில் தான் நூலாசிரியரின் எழுத்து எழுந்து நிற்கிறது.
அந்த சிறுவன் கொலை செய்ததன் பின்னணி, ஒடுக்கப்பட்டோர் படும் சமூக ரீதியிலான அவலம், சுற்றித்திரியும் அந்த 7 நாட்களில் நூலின் ஆசிரியர் நமக்கு காட்டும் சம்பவங்களும் தான் நம்மை இந்த நூலைப் பற்றி இத்தனை நாட்கள் பேசவும் ஏன் ஒரு படமாய் எடுக்கவும் கூட வைத்திருக்கிறது.
நாவலின் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது.
*"சிதம்பரம் நினைத்தது அப்படியில்லை. வலது கையை மட்டும் துண்டிக்க திட்டமிட்டிருந்தான்"*
அதாவது சிதம்பரம் என்ற அந்த 15 வயது நிரம்பிய சிறுவன் வடக்கூரான் என்ற, தனது அண்ணனை கொலை செய்த ஒரு பண்ணையாரை கொல்லும் நோக்கத்தோடு அல்லாமல் - கொல்லுகின்ற அளவிற்கு வெறி இருந்தாலும் - .அவனது வலது கையை வெட்ட மட்டும்தான் நினைக்கிறான். ஆனால் அந்நேரத்தில் எதிர்பாராமல் வெட்டு அவனது கழுத்தில் விழுந்து விட அவன் இறந்தும் போகிறான். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவன் பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. தன் அண்ணனைக் கொன்றவன் அழிந்தான் என்ற மகிழ்ச்சி தான் அவனுக்கு.
அவனைக் காட்டிக் கொடுக்காமல் அவனை கொண்டாட செய்வதோடு, அவனது ஊரே அவனுக்குக் காவலாய் நிற்கிறது அவன் செய்த கொலைக்கு. காரணம் அத்தனை துயரங்களை அந்த மக்களுக்கு கொடுத்திருக்கிறான் அந்த வடக்கூரான். தான் மிகப் பெரிய பண்ணையாராக வேண்டும் என்பதற்காக ஏழை மக்களின் நிலங்களை எல்லாம் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அபகரித்தவன் வடக்கூரான். எனவே அவனது கொலை அந்த ஊர் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
வடக்கூரான் சிதம்பரத்தின் அண்ணனை ஏன் கொன்றான்? அவனைக் கொல்ல சிதம்பரம் எடுத்த முயற்சிகள் என்னென்ன? சிதம்பரத்திற்கு தெரியாமலேயே வடக்கூரானைக் கொல்ல அவன் தந்தை செய்த உதவி என்ன? என்பதெல்லாம் நாவலைப் படித்தால் உங்களுக்கே புரியும்.
முக்கியமாக இதில் நான் கூற வந்தது, அவர்கள் சுற்றித் திரியும் அந்த ஏழு நாட்களை பற்றி தான்.
அந்த ஏழு நாட்களில் சிதம்பரத்திற்கும், அவன் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் உண்மையான ஒரு கிராமத்து தந்தைக்கும் - மகனுக்கும் இடையேயான அற்புதமான ஒரு உறவை நம் கண்முன் காட்டுகிறது.
அத்தோடு சிதம்பரத்தின் மாமா மற்றும் அத்தை. இப்படி ஒரு அத்தை, மாமா நமக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் ஏங்கும் வகையில் அவர்களின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தின் அம்மா மற்றும் அவனது தங்கை என அத்தனை பாத்திரப் படைப்புகளும் நம் குடும்பத்தை நம் கண்முன் நிறுத்துகிறது.
சிதம்பரமும் அவனது தந்தையும் சுற்றி திரியும் அந்த ஏழு நாட்களில் அவர்கள் பேசும் பேச்சுக்கள், அவர்கள் பார்க்கும் மனிதர்கள், தங்கும் இடங்கள் அனைத்துமே நாமே நேரில் சென்று அனுபவித்து வந்ததைப் போல இருக்கிறது. நூலாசிரியர் பூமணியின் வார்த்தை சித்திரத்தில் அத்தனை நேர்த்தி.
அரசு இயந்திரத்தின் மற்றும் நீதித் துறையின் செயல்பாடற்ற தன்மையையும் நூலாசிரியர் ஆங்காங்கே சிதம்பரம் வாயிலாகவும் அவனது தந்தையின் வாயிலாகவும் கோடிட்டுக் காட்டுகிறார்.
நாவலின் ஓரிடத்தில், நீதித் துறையை பற்றி அப்பாவும் மகனும் இவ்வாறு பேசிக் கொள்கின்றனர்.
*"அப்ப கோர்த்து எதுக்கு, இல்லாறத சொல்லித் தண்டிக்கிறதுக்கா கோர்ட்டாரு இருக்காரு"*
*"செய்யாற குத்தத்துக்குத் தண்டன அனுபவிக்கறவன் எத்தன பேரு தெரியுமா? குத்தம் செஞ்சவன் பணத்தக் குடுத்து வெளிய வந்துருவான்"*
*"அப்படி அநியாயமா தண்டன குடுக்குற கோர்ட்டார வச்சுப்பார்க்கலாமா. செய்யாற குத்தத்துக்குச் செயிலுக்குப் போறதவிட அந்த எடத்துலயே அவன் தலையக் கீழ உருட்டீட்டு உள்ள போறது"*
*"பொய்க்குருதைக்குள்ள ஆட்டக்காரன் இருந்த மாதிரி கோர்ட்டாரு உக்காந்துகிட்டு வாறவன வெசாரிச்சா எப்படி? சங்கதி நடந்த எடத்துக்கு போயி நாலு சனங்கள நேருல வெசாரிக்கனும். அப்பத்தான் நாயம் எதுன்னு தெரியும். இதென்னடான்னா கோழி முட்டைக்கு ரோமம் புடுங்குனது போல மெனக்கெட்டு வெசாரிச்சு வாய்தா மேல வாய்தா போட்டு இழுத்தடிப்பான். ஒவ்வொரு வாய்தாவுக்கும் கோர்ட்ல நிக்கிற சேவகன் இன்னாரு வா, அன்னாரு வான்னு கத்திக் கூப்புடுறதுக்கு கையை நீட்டுவான். மொதத் தட்சண வச்சிட்டுத் தான் உள்ள போகணும். அங்க நாயம் கெடைக்கும்னு நெனச்சிக்கிட்டு. எல்லாப் பெயலும் சேந்து கேலிக்கூத்து நடத்துறானா சும்மாவா. வேல மெனக்கெட்ட பெயக. என்னக் கேட்டா கோர்ட் மயிரு மட்ட ஒண்ணும் இருக்கக் கூடாது. ஒருத்தன் அநியாயம் பண்றான்னா மத்த சனங்க சேந்து சுடச்சுட அந்த எடத்துலயே தண்டன குடுக்கணும்"*
- இது தான் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களின் கோபம்.
மற்றோரிடத்தில் சிறையில் இருக்கும் அதிகாரிகளைப் பற்றி சிதம்பரத்தின் அப்பா இவ்வாறு கூறுவார்.
*"மொதல்ல செயில்ல வேல பாக்குற அத்தன பெயகளையும் புடிச்சு உள்ள போடணும். கொஞ்ச அநியாயமா பண்றான். இருக்கிற பண்டம் அத்தனையும் அவன் தின்னது போகத்தான் மிச்சம் கைதிகளுக்கு."*
இதையெல்லாம் படித்தால், தப்பு செய்துவிட்டு உள்ளே போகிறவர்களை விட உள்ளே இருப்பவர்கள் செய்கின்ற தப்பு தான் அதிகம் போலும் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
இது எல்லாவற்றையும் தாண்டி இந்த நாவலின் நான் மிகவும் ரசித்த இரண்டு வரிகள் உண்டு. அது,
*"சொத்து கிறுக்கு லேசுக்குள்ள விடாது. கறியறுத்து கணடங்கண்டமா காயப்போட்டாக் கூட ஆச போகாது. கொன்னு குழியத் தோண்டி வச்சா அடங்கும்".*
நிறைய மக்கள் இப்போது அப்படித்தானே அலைந்து கொண்டிருக்கிறார்கள். சொத்து சொத்து என்று சொந்தங்களைக் கூட கவனிக்காமல். அப்பேர்பட்டவர்கள் எல்லாம் கடைசியில் என்னத்தை தான் கொண்டு போகப் போகிறார்களென்று அவர்களுக்குள் உரையாடல் மேலும் நீளும்.
*"சில கட்சிக்காரர்கள் பணக்காரர்களைச் சகட்டுமேனிக்கு ஏசுவார்கள். பிறகு அவர்கள் கடைகளுக்கு உண்டியலைத் தூக்கிக்கொண்டு போவார்கள். பார்க்கச் சிரிப்பாயிருக்கும்"* - யாரை சீண்டுகிறாரென்று நன்றாகவே விளங்குகிறது.
இன்னும் நான் இந்த நாவலை அடிப்படையாய் வைத்து வெளிவந்த அசுரன் படத்தை பார்க்கவில்லை. ஒருவேளை பார்த்தால் இந்த நாவலினால் ஏற்பட்ட பிரமிப்பு அகன்று விடுமோ என்று கூட தோன்றுகிறது. ஆனால் பார்க்க வேண்டும்.
அத்தோடு கதையை திரையில் பார்ப்பதைவிட, எழுத்துகளில் வாசித்து நம் கற்பனையில் நாமே உருவாக்கிக்கொள்ளும் பிம்பத்தின் இன்பம் அலாதியானது. நீங்கள் படம் பார்த்து இருந்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி நிச்சயம் இந்நாவலை ஒருமுறை வாசித்துப் பாருங்கள். என்னைப் பொறுத்தவரை படத்தை விட இந்த நாவல் உங்களை மிகவும் கவரும் என்பது திண்ணம்.
மீண்டும் வேறொரு புத்தகத்துடன் விரைவில் சந்திக்கிறேன்....🙏
வாசிப்பும், பகிர்வும்:
~ *ஜெ. திவாகர்* ~
22/10/2019

Comments
Post a Comment