Posts

Showing posts from October, 2020

118 - கல்வி எனப்படுவது...

Image
 வாசிப்பு அனுபவம் - 118 நூல் : கல்வி எனப்படுவது... ஆசிரியர் : லதா ராமகிருஷ்ணன் வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பக்கங்கள் : 24 விலை : 15 நம்மிடம் யாரேனும் இந்த தலைப்பினை - அதாவது - ”கல்வி எனப்படுவது...” என்ற தலைப்பினைக் கொடுத்து ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் நம்மில் பெரும்பாலானோர் கல்வியைக் குறித்து எழுதத் தொடங்குகையிலேயே மதிப்பெண், தேர்ச்சி என்பது குறித்தே எழுதுவோம் அல்லவா? ஒருவேளை இன்றைய சூழ்நிலையில் எழுதும் கட்டுரையாயின் புதிய தேசிய கல்வி கொள்கையையும், அதன் சாதக பாதகங்களையும் சேர்த்தே எழுதுவோமாய் இருக்கும்.  ஆனால் இந்நூலாசிரியர் இவற்றையெல்லாம் தாண்டியும் சிந்தித்திருக்கிறார். இச்சிறுநூல் அதனாலே தனிகவனம் பெறுகிறது.  ”கற்றது கையளவு, கல்லாதது உலகளவு“ என்பார்கள். இது நம் கல்வித்துறைக்கும் மிகவும் பொருத்தமானது. இன்றைய உலக நாடுகள் தங்களுடைய பாதுகாப்புக்கென ஆயுதங்கள் வாங்குவதில் செலவழிக்கும் தொகையோடு ஒப்பிட மக்களுக்கு கல்வி கற்பிக்கவென ஒதுக்கும் நிதியின் அளவு பெரும்பாலும் கணிசமான அளவு குறைவாகவே இருப்பதாக” கூறி நூலினைத் தொடங்கும் ஆசிரியர்,  மனிதனின் வலிமையான ஆ...