Posts

Showing posts from June, 2020

மெல்லத் திறந்தது கதவு - வாசிப்பு அனுபவம் 105

Image
வாசிப்பு அனுபவம் - 105 நூல் : மெல்லத் திறந்தது கதவு ஆசிரியர் : ஜி. மீனாட்சி வெளியீடு : தாமரை பப்ளிகேஷன்ஸ் பக்கங்கள் : 117 விலை : ₹ 105 வகை : சிறுகதைகள்           அரிதாரம் பூசிய அழகு நங்கையராய் இயல்பாய் மிளிரும் தமிழ் வார்த்தைகளின் மீது தங்களின் கவித்திறனையும், கற்பனை வளத்தையும் புகுத்தி வார்த்தைகளுக்கு வசீகரம் சேர்க்கும் பாணியிலான எழுத்தாளர்கள் ஒருபுறமென்றால், தங்களின் இயல்பான எழுத்துநடையால் அன்றாட வாழ்க்கைச் சூழல்களையே கதைக்களமாக்கி எவ்வித அதீத மெனக்கெடலுமின்றி நம்மை தங்களின் வார்த்தைகளுக்குள் இழுத்துக் கொள்ளும் எழுத்தாளர்கள் மறுபுறம்.             இதில், இச்சிறுகதை தொகுப்பினை எழுதிய ஜி. மீனாட்சி அவர்கள் இரண்டாம் வகை. நம் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளையே கதைகளாக்கி இப்படியும் ரசிக்கத்தக்க வகையிலான சிறுகதைகளை எழுதமுடியுமென நிரூபித்திருக்கிறார். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மற்றவர்களுக்கு கடந்து செல்லும் கதைகளாகவோ, நம் தவறுகளை நாம் திருத்திக் கொள்வதற்கான பாடங்களாகவோ அமைந்துவிடுவது இயற்கைதானே. இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும் ஏதோவொரு...

ஒரு நிமிடம் ஒரு புத்தகம் - இன்றில்லை எனினும்

ஒரு நிமிடம் ஒரு புத்தகம் - இன்றில்லை எனினும்...

சீருடை - வாசிப்பு அனுபவம் 104

Image
வாசிப்பு அனுபவம் - 104 நூல் : சீருடை ஆசிரியர் : கலகலவகுப்பறை சிவா வெளியீடு : Books for children பக்கங்கள் : 64 விலை : ₹ 50 *அண்ணே.... நீங்கள் ஆசிரியர் தானே?* ஆமாம் தம்பி. *திரைப்படங்கள் பார்க்கும் ஆர்வமுண்டா?* என்னங்க தம்பி? இப்படி கேக்குறீங்க? சினிமா பார்க்காம யாராச்சும் இருப்பாங்களா? நானெல்லாம் ஊரடங்குங்கு முன்னாடி மாசத்துக்கு 4 படமாச்சும் தியேட்டர்ல போய் பார்த்திடுவேன். ப்ச்... இப்போ தான் முடியல..... *நல்லது. என்ன மாதிரியான படமெல்லாம் பார்ப்பீங்க?* எல்லா படமும் பார்த்துடுவேங்க. காமெடி, ஆக்சன், காதல்னு எந்த சப்ஜெக்ட் படம்னாலும் பார்ப்பேன். *இந்த கல்வி, இன்றைய கல்வி முறை இது சம்பந்தமான படங்கள்லாம் பார்க்குறதுண்டா?* எங்க தம்பி தமிழ்ல அது மாதிரி படங்கள்லாம் வருது? ஏதோ அத்தி பூத்த மாதிரி அப்பப்போ வாகை சூடவா, குற்றம் கடிதல்னு சில படங்கள் இருக்குற எதார்த்தத்தை சொல்லுற மாதிரி ஒண்ணு, ரெண்டு வருது. அவ்ளோ தான். இன்னும் இது மாதிரி கல்வியைப் பற்றியும், கல்வி முறைகளைப் பற்றியும் பேசுற மாதிரி நிறைய படங்கள் வந்தா பார்க்கலாம் தான்.  *அப்டினா இந்தாங்க..... இந்த புத்தகம் உங்களுக்கு தான்.... முதல்ல...

குற்றப் பரம்பரை - வாசிப்பு அனுபவம் 103

Image
வாசிப்பு அனுபவம் - 103 நூல் : குற்றப் பரம்பரை ஆசிரியர் : வேல ராமமூர்த்தி வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் : 448 விலை : 400 வகை : நாவல் ஏன் எதுவுமே எழுதத் தோன்றவில்லை?  ஒரு நூல் வாசித்து முடித்தவுடன் அதன் வார்த்தைகளின் லயிப்பில் - அந்த நூலின் செய்திகளின் பிரம்மிப்பிலிருந்து தன் வாசகனை மீள விடாமல் இத்தனை தூரம் கட்டிப்போட ஒரு புத்தகத்தால் இயலுமா? இயலும். இதோ கண்முன் சாட்சியாய் குற்றப் பரம்பரை நூல் வாசித்த பலருண்டு என்னைப்போல்.  களவு, கொள்ளை, கொலை இவற்றையே தொழிலாகக் கொண்டவர்கள் வேலுச்சாமி என்கிற வேயன்னாவைத் தலைவராகக் கொண்ட கொம்பூதி மக்கள். கொள்ளையடித்த பொருளை பச்சமுத்து எனும் ஏமாற்றுக்கார வணிகனிடம் அப்படியே ஒப்படைத்து அவன் தரும் தானிய, தவசங்களால் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ளும் அப்பாவிக் கூட்டம். கொள்ளையையே தொழிலாகக் கொண்டவர்கள் அப்பாவிகளா என்ற வினா எழலாம். அவர்கள் கன்னம் வைத்து கொள்ளையடிப்பது இல்லாதப்பட்ட ஏழைகளின் வயிற்றில் அல்ல. பெட்டி நிறைய பணமிருந்தும் இல்லாதோருக்கு கிஞ்சித்தும் கொடுத்துதவாத கொழுத்த பணக்காரர்களிடமே. நாவலின் தொடக்கத்தில் காவலர்களால் துரத்தப்பட்டு ஓடி ...

இன்றில்லை எனினும் - வாசிப்பு அனுபவம் 102

Image
வாசிப்பு அனுபவம் - 102 நூல் : இன்றில்லை எனினும் ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 160 விலை : ₹ 125 வகை : கட்டுரைகள் இதுவரை பல நூல்களை நான் வாசித்திருக்கலாம். இனியும் பல நூல்கள் நான் வாசிக்க காத்திருக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றையும் விட இந்நூல் எனக்கு மிக மிக முக்கியமான என் வாழ்வில் மறக்கவியலா ஒரு நூல். காரணம்...... மருத்துவமனக்கு உள்ளே அறுவை சிகிச்சை அறைக்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியே தவிப்புடன் நின்ற கணத்தில் உறவுகள், நட்புகளின் அரவணைப்பான கரங்களோடு மற்றொரு கரமாய் என்னுடன் உடனிருந்த நூல் இது. *"மகன் பிறந்திருக்கிறான்"* என்ற மகிழ்வான செய்தி கேட்ட பிறகு விடிய விடிய மருத்துவமனையின் வாயிலில் அமர்ந்து வாசித்த நூலிது. இதனை மறப்பது அத்தனை எளிதானதல்லவே. சோர்வுறும் தருணங்களில் எல்லாம் என்னை உற்சாகம் கொள்ள வைக்கும் எஸ்.ரா.வின் எழுத்துகள் என் வாழ்வின் மிக மிக மகிழ்வான தருணத்திலும் உடனிருந்தது உள்ளத்தின் உவகையை மேலும் இரட்டிப்பாக்கியது.  இனி நூலைப் பற்றி..... பலதரப்பட்ட வெவ்வேறு விதமான தளங்களைப் பேசும் 24 கட்டுரைகளின் தொகுப்பு நூல் *"இன்றில்ல...

பட்டத்து யானை - வாசிப்பு அனுபவம் 101

Image
வாசிப்பு அனுபவம் - 101 நூல் : பட்டத்து யானை ஆசிரியர் : வேல ராமமூர்த்தி வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் : 376 விலை : ₹ 380 வகை : நாவல் சுதந்திரம் - இந்த ஒற்றைச் சொல்லுக்குப் பின்னால் காந்தி என்ற தனிநபரின் அகிம்சாவாதம் மட்டுமே பெரிதாய் பேசப்படும் நம் தேசத்தில் தன்னுயிரையும், உறவுகளையும் துச்சமென மதித்து ஆயுதமேந்திய போராட்டமே எதிரியை மிரட்டவும், விரட்டவும் செய்யும் விடுதலைக்கான ஒரே வழி என போர்க்களம் கண்டவர்களின் தியாகங்கள் அவ்வளவாய் பேசப்படுவதில்லை.  அகிம்சை தான் அடுத்தவரை இம்சிக்காத, நீண்ட கால பலன் தரும், என்றென்றைக்கும் அமைதியை மட்டுமே நிலவச் செய்யும் அறிவாயுதம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் எதிரி தன்னை விட வலிமையானவனாய், ஆயுதமேந்தி அழித்தொழிப்பவனாய் இருக்கையில் அவன் முன் நிராயுதபாணியாய் நெஞ்சை நிமிர்த்தி நிற்பது அறிவீனமென்று எண்ணி ஆயுதமேந்துவது தவறல்ல என்று புரட்சி செய்த புரட்சியாளர்களும் அகிம்சாவாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல. அத்தகையதொரு புரட்சிக்காரன் தான் *"ரணசிங்கம்."* அழகான வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து நாசம் செய்து கொண்டிருக்கும் மதயானைக் கூட்ட...

குருதி ஆட்டம் - வாசிப்பு அனுபவம் 100

Image
வாசிப்பு அனுபவம் - 100 நூல் : குருதி ஆட்டம் ஆசிரியர் : வேல ராமமூர்த்தி வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் : 88 விலை : ₹ 100 *"உச்சி ராத்திரி. உள்ளங்கை தெரியாத இருட்டு. தவசியாண்டி கோடாங்கி அடிக்கிற அடியில் காடு கிழியுது....."*  *'டுண்... டுண்ண்.... டுண்....* *டுண்... டுண்ண்.... டுண்......'* என்று தொடங்கும் போது நாவலின் வரிகளில் பதியும் நம் கண்களை  *"வைக்கோல் பிரி சுற்றிய ஒருவன் சுழற்றி எறிந்த வளரி, ஊரைப் பார்த்து ஓடிக்கொண்டிருந்த பெருநாழி முதலாளியின் கழுத்தைக் குறிவைத்துப் போனது"* என்று இறுதி வரிகள் முடியும் வரை நாவலிலிருந்து அகற்றுவது கடினமே.... நூலாசிரியர் திரு. வேல ராமமூர்த்தியின் எழுத்துகள் நாவலோடு நம்மை அந்தளவுக்கு இறுக்கி கட்டிப் போட்டு விடுகின்றன.            ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் பல பதிப்பகங்கள் தங்கள் பதிப்பக நூல் விற்பனையில் தள்ளுபடிகளை அறிவிக்க டிஸ்கவரி புக் பேலஸும் அது மாதிரி அறிவித்த ஒரு தள்ளுபடியில் வாங்கியவை தான் வேல ராமமூர்த்தியின் அத்தனை புத்தகங்களும்.  பொதுவாகவே நான் புதிதாக ஒரு எழுத்தாளரின் நூல்களை வாச...

மனுசி - வாசிப்பு அனுபவம் 99

Image
வாசிப்பு அனுபவம் - 99 நூல் : மனுசி ஆசிரியர் : பாமா வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பக்கங்கள் : 222 விலை : ₹ 200            திருமணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து சமுதாயத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை யாரையும் சார்ந்திராமல் செய்ய வேண்டுமென நினைக்கும் ஒரு பெண் இச்சமூகத்தால் சந்திக்கும் இன்னல்கள் கணக்கில்லாதவை. ஆண்களால் மட்டும் தான் என்றில்லை பெண்களாலேயே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவள் சந்திக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆணோ, பெண்ணோ திருமணம் செய்யாமல் வாழவே கூடாது என்பது தான் சமூகம் தனக்குத் தானே கட்டமைத்துக் கொண்டுள்ள சட்ட திட்டம்.               அன்னை தெரசா, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா,..... போன்ற திருமணம் செய்து கொள்ளாமல் மக்களுக்காகவே வாழ்ந்த,வாழும் தேசிய, உலக பெண் தலைவர்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் இதே சமூகம், தன் அக்கம் பக்கத்து வீட்டு பெண்ணொருத்தி  திருமணம் ஆகாமலோ திருமணம் செய்து கொள்ளாமலோ இருந்தால் அவர்கள் பார்க்கும் பார்வையோ, கேட்கும் கேள்விகளோ சொல்லிலடங்காதவை.       ...