சலூன் - வாசிப்பு அனுபவம் 81
வாசிப்பு அனுபவம் - 81
நூல் : சலூன்
ஆசிரியர் : க. வீரபாண்டியன்
வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்
பக்கங்கள் : 128
விலை : ₹ 140
வகை : நாவல்
"உயிர் போகும் வலியை விடக் கொடியது - திருமணத்திற்கு முன் மயிர் போகும் வலி"
இதுபோன்ற நம் தலைமுடி சார்ந்த பல மீம்களை தினமும் சமூக வலைதளங்களில் பார்க்கிறோம். மகிழ்வுடனோ, வேதனையுடனோ அவற்றை பகிர்ந்து பகடியும் செய்கிறோம். நம் அன்றாட வாழ்வில் நம்மை அழகுபடுத்திக் கொள்கிறோம் எனில் நம் கவனத்தில் பெரும்பான்மையை நம் தலைமுடிக்கே தருகிறோம் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
ஆனால், எத்தனை பேர் நம் சிறுவயது முதல் நமக்கு முடிதிருத்திய கலைஞர்களை நினைவில் வைத்திருக்கிறோம்? நாம் வசிக்கும் இடத்தில் / ஊரில் இரண்டுக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கலைஞர்கள் இருந்தாலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட நபரைத் தேடித்தானே எப்பொழுதுமே செல்வோம் அவரிடம் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சரி. ஏன் அவ்வாறு? நம் மனத்திற்கு திருப்தியாய் அவரால் மட்டுமே முடிதிருத்த முடிகிறது என்ற அசைக்க இயலா நம்பிக்கையில் தானே? மேலும் எங்கேனும் வெளியூர் சென்று விட்டாலும் கூட, எத்தனை நாட்கள் ஆனாலும், அதே நபரிடம் வந்து தானே முடி வெட்டிக் கொள்வோம்? அவர்கள் நம் வாழ்வின் ஓர் அங்கம் என்பதற்கு இதைவிட வேறென்ன அத்தாட்சி வேண்டும்?
இந்நாவலும் அப்படிப்பட்ட பல்வேறு தரப்பட்ட முடிதிருத்தும் கலைஞர்கள் கதை நாயகனின் வாழ்வோடு எப்படி தவிர்க்க இயலாதவர்களாய் - முயன்றாலும் மறக்க முடியாதவர்களாய் உள்ளனர் என்பதைப் பற்றி பேசுவதே.
நாவலின் நாயகனான ஆனந்த், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்பவன். முடி வெட்டிக் கொள்ள கூட போதிய நேரம் கிடைக்காமல் - வாஷிங்டன் சென்று திரும்புகையில் கண்ணில் ஏற்பட்ட சிறுகுறை காரணமாக மொபைல் பயன்படுத்த இயலா சூழலில் கண்கள் மூடி உறங்க நினைக்கையில் அவனுக்குள் விரியும் எண்ண ஓட்டத்தில் அவனது குழந்தைப் பருவம் முதல் அவனுக்கு முடி வெட்டிய கலைஞர்கள் ஒவ்வொருவராய் நினைவுக்கு வருகின்றனர்.
கதையில் வரும் முத்தையா தாத்தாவும், செல்வா அண்ணனும் நம்மை அதிகம் கவர்கிறார்கள். நிச்சயம் உங்கள் வாழ்விலும் அப்படி ஒரு முடி திருத்தும் முத்தையா தாத்தாவோ, செல்வா அண்ணனோ இருந்திருப்பார்கள் - இருப்பார்கள். பள்ளிப் பருவத்தில் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் செல்லும் இடங்களில் முக்கிய இடம் சலூன் கடைகளுக்கு உண்டு. அங்கு சென்று ஸ்டைலாக முடியை தூக்கி வாரிவிட்டு கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசிக்காமல் பால்ய வயதைக் கடந்தவர்கள் மிகச் சிலரே.
*"ஊருக்குள்ள வைத்தியரு, மருத்துவச்சின்னு கவுரவமா வாழ்ந்துட்டு இருந்த குடியைக் கெடுத்து இதுதான் உன்னோட குலதொழில்னு ஊருக்கே நீ சேவகம் பண்ண வேண்டியது உன்னோட கடமைன்னு சொல்லி ஆக்கி வச்சது யாருன்னு யோசிக்கணும்"* என்று முத்தையா தாத்தா வாயிலாக இச்சமூகம் மீதான அவர்களின் தார்மீக கோபத்தையும் நாவலில் பதிவு செய்கிறார் நூலாசிரியர்.
திருப்பதி கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் முடிதிருத்தும் வேலை செய்யும் நாகண்ணா, டெல்லியின் ரோட்டோரத்தில் முடிதிருத்தும் பணி செய்யும் தாகுர், மாணிக்கம், குட்டி என ஒவ்வொரு பாத்திரமும் மனதில் நிற்கிறது.
திருநங்கைகள், திருநம்பிகள் குறித்தும் சுருக்கமான அதே நேரம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கிறார் ஆசிரியர். *"அவர் எப்படி அழைக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறாரோ அப்படித்தான் அழைக்க வேண்டும். அதுதான் நாகரிகம். பெண்ணைப் பெண்ணாகவும் ஆணை ஆணாகவும் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் திருநங்கையைத் திருநங்கையாகவும் திருநம்பியைத் திருநம்பியாகவும் பார்க்க வேண்டும்"* என்று கேதரின் பாத்திரம் மூலம் உணர்த்துகிறார்.
இந்நாவலை வாசிக்கையில், சிறுவயதில் எனக்கு முடி வெட்டிய கோவிந்தராஜ், ரேணு அய்யா, அவரின் மகன் முருகதாஸ் என நீளும் இப்பட்டியலில் கடந்த மூன்று ஆண்டுகளாய் நான் முடிதிருத்திக் கொள்ளும் சலூன் கடைக்கார அண்ணன் வரை நினைவுகளில் வந்து தங்கள் தடத்தினைப் பதித்துச் சென்றனர். என்னதான் இப்போது குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து முடிவெட்டிக் கொண்டாலும் சிறுவயதில் ஓலைக்குடிசையில் தரையில் அமர்த்தி சாராய நெடியுடன் முடிவெட்டிய கோவிந்தராஜ் அவர்களை எனக்கு நினைவூட்டியதே இந்நாவலின் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன். நாவல் விமானம், கிராமம், டெல்லி நகர வீதிகள் என வெவ்வேறு தளங்களில் பயணித்தாலும் நம் கவனம் சிதறாது நாவலை நேர்த்தியாய் கொண்டு சென்ற விதம் மிக அருமை. வாழ்த்துகள் நூலாசிரியர் திரு. க. வீரபாண்டியன் அவர்களே.
அடுத்ததாக நூலிலிருந்து சில வரிகள்:
*"ஒன்றுக்கும் உதவாத சாதாரண விசயங்களைக் கூட ஊதிப் பெரிதாக்கி எல்லோரையும் பெரிய சிக்கலுக்கு உள்ளாக்குவதில் மனித இனம் மிகச்சிறந்தது"*
*"வயது ஏறுமுகத்தில் இருக்கக் கட்டுப்பாடுகள் இறங்குமுகப்படுவது சமூகநியதி. சிலருக்கு வராமலும் போகலாம். கடைசிவரை கட்டுப்பாடுகளின் கூடுகளுக்குள் தங்களைக் குறுக்கிச் சுருக்கிக் கொண்டு வாழப் பழகிவிடுவார்கள்."*
*"மறந்ததை நினைச்சு சந்தோஷப்படுங்க. ஞாபகங்கள் ரொம்பப் பெரிய வியாதி"*
இறுதியாக, முத்தையா தாத்தா கூறும் ஒரு வரியுடன் இதனை முடிக்கிறேன். *"தெனம் ரெண்டு மொறை. வாரம் ரெண்டு மொறை. மாதம் ரெண்டு மொறை. ஆண்டுக்கு ரெண்டு மொறைன்னு இருக்குது தெரியுமா? இதையெல்லாம் செஞ்சி வந்தா எந்த நோய்நொடியும் அண்டாது"*
இதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சா சொல்லுங்க. தெரியலைனா.............
..
....
.....
ஆமாம். அதேதான். புத்தகத்தை வாங்கி படிச்சு தெரிஞ்சுக்கோங்க.😊
வாசிப்பும், பகிர்வும்
~ *திவாகர். ஜெ* ~
12/02/2020

Comments
Post a Comment