கதவு - வாசிப்பு அனுபவம்
*வாசிப்பு அனுபவம் : 71*
நூல் : கதவு
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்
வெளியீடு : அன்னம் வெளியீடு
பக்கங்கள் : 167
விலை : ₹ 100
வகை : சிறுகதைகள்
1960 களில் பல்வேறு இதழ்களில் வெளியான கதவு, மின்னல், சாவு, நெருப்பு, சிநேகம், மனிதம்...... உள்ளிட்ட கி.ரா.வின் 13 சிறுகதைகளின் தொகுப்பு நூலே - கதவு.
முதல் சிறுகதையான கதவு - இச்சிறுகதை உங்களுக்கு பல்வேறு விதமான பால்யகால நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்து நினைவுக்குக் கொண்டு வரும். ஒரு கிராமத்தில் உள்ள ஏழை குடியானவனின் வீட்டு கதவு, அவர்கள் செலுத்தாத வரி பாக்கிக்காக உள்ளூர் தலையாரியால் கொண்டு செல்லப்படும் கதைதான் கதவு. இன்றைக்கு போன்றே அன்றைக்கும் அரசாங்கம் இயலாதவர்களிடம் இருந்தே இருப்பதை பிடுங்கப் பார்க்கிறது என்பதை இக்கதை மூலம் உணரலாம். இந்த கதவு கதையில் வரும் லட்சுமியும், சீனிவாசனும் தாங்கள் வீதிகளில் பொறுக்கிய தீப்பெட்டி காகிதங்களை கதவுகளில் எச்சில் மூலமாகவும், சோற்றுப் பருக்கைகள் மூலமாகவும் ஒட்டி மகிழ்ந்து விளையாடுவதை நம் பால்ய காலத்தில் நம்மில் பலரும் நிச்சயம் செய்து விளையாடி இருப்போம். அந்தக் கதவு எடுத்துச் செல்லப்படும் பொழுதும் அதைப்பற்றி என்னவென்றே உணராத அவர்களிருவரும் அக்கதவிற்கு பின் ஒரு கல்யாண ஊர்வலம் போல மேளம் தட்டிக் கொண்டு செல்வது சிறுவர்களுக்கு உரித்தான ஒரு அறியாச் செயல். இறுதியில், கதவை யாருக்குமே பயன்படாமல் எங்கோ ஒரு புதரின் நடுவில் போட்டு வைத்திருப்பது இதற்காகத்தானா ஒரு வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக கதவைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தீர்கள் என்று அவர்களின் சட்டையைப் பிடித்துக் கேட்கத் தோன்றுகிறது.
இரண்டாவது கதையான, *"குடும்பத்தில் ஒரு நபர்"* கதையை வாசிக்கையில் நிச்சயம் உங்கள் கண்களின் ஓரம் நீர் துளி எட்டிப் பார்க்கும். ஆம். பசுவினை தங்கள் வீட்டில் ஒருவராகவே இன்னும் சொல்லப்போனால் மனிதர்களுக்கும் மேலான ஒரு ஜீவனாய் நினைத்து வழிநடத்தும் ஒரு குடும்பத்தின் கதை இது. அதிலும் இக்கதையில் கிராமத்து மக்களின் வெள்ளந்தியான நம்பிக்கைகளையும், தங்களது நம்பிக்கைகளையும் மீறி மருத்துவம் பார்க்கலாம் என்று சென்றால் அங்கு அவர்கள் படும் அவமானங்களையும், அரசு இயந்திரத்தின் மெத்தனத்தால் ஓர் உயிர் பறிபோவதையும் தெள்ளத் தெளிவாய் காட்டியிருப்பார் நூலாசிரியர்.
இந்நூலிலுள்ள எல்லாச் சிறுகதைகளைப் பற்றியும் பல பக்கங்களுக்கு ஒரு மிகப் பெரிய கட்டுரையே எழுதலாம். அத்தனை தகவல்களை - மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது *கதவு* நூல்.
மூன்றாவது சிறுகதையாய் இடம்பெற்றுள்ள *"ஜெயில்"*, பள்ளி மாணவனுக்கு பள்ளிக்கூடம் என்பது எத்தனை அவஸ்தையை தரக் கூடிய இடமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.
*"சாவு"* சிறுகதையைப் பற்றி எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. இதில் ஜக்குவின் நிலைமையை நினைக்கையில் கண்ணீர் வராத குறைதான். உங்களுக்கு அத்தனை சீக்கிரமாய் அழுகை வராது எனில் இக்கதையை ஒருமுறை வாசித்து பாருங்கள்.
அரசாங்கத்தை நம்பி - அவர்கள் அறிவிக்கும் திட்டங்களை நம்பி சில நேரங்களில் ஏமாந்து போகும் பல சாமானிய மக்களின் பிரதிநிதிகளில் ஒருவரான அப்பாவு செட்டியாரைப் பற்றிய கதைதான் *"மாயமான்"*. கிணறு தோண்ட கொடுத்த பணம் முழுதாய் கைக்கு வராத நிலைதான் என்றைக்கும் போல.....
கர்ப்பவதியான தனது மனைவி சங்கரம்மாளின் பலநாள் ஆசையான 'பலாப்பழம் சாப்பிட வேண்டும்' என்பதை நிறைவேற்றுவதற்காக பொன்னுசாமி படும் துயரங்களையும், ஆனால் அதை அவன் துயரமாக நினைக்காமல், ஒரு நடு இரவில் சென்று கூட அந்த பலாப்பழத்தை வாங்கி வரும் அவனது உண்மையான அன்பு உள்ளபடியே நம்மையெல்லாம் மெய்சிலிர்க்கச் செய்கிறது. அத்தோடு கணவன் - மனைவி உறவு என்பது ஏதோ சினிமாவில் காட்டப்படுவது போன்று மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. உள்ளபடியே அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்நியோன்னியத்தை மிகத் தெளிவாக நூலாசிரியர் *"பலாப்பழம்"* என்ற சிறுகதையில் பதிவு செய்துள்ளார்.
*"சினேகம்"* என்ற சிறுகதையில் ராணி என்ற ஒரு அனாதை சிறுமியை அறிமுகப்படுத்துகையில் கி.ராஜநாராயணன் அவளைப் பற்றி இவ்வாறு விளக்குகிறார். *"குளிருக்கு அடக்கமாக ஒரு மடியோ, அடக்க முடியாத துக்கத்தினால் முகத்தை புதைத்து அழ ஒரு மார்போ இல்லை அவளுக்கு. அவள் ஒரு அனாதை."* ஒரு பெற்றோரில்லா குழந்தையின் மன வேதனையையும், துயரத்தையும் இதைவிட ரத்தினச் சுருக்கமாய் உணரும் வகையில் வேறு யாரால் எழுத இயலும் கீ.ரா.வைத் தவிர.
இறுதியாய், *"ஜடாயூ"* கதையில் வரும் தாத்தையா நாயக்கர் தன் உயிரையும் துச்சமென மதித்து ஒரு பெண்ணை - அவளின் மானத்தைக் காக்க போராடுவது, நாமெல்லாம் ஏதோ ஒரு வகையில் துயரத்தில் துன்பப்படும் மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை நம்முள் மிக ஆழமாய் உட்செலுத்துகிறது.
முன்னரே கூறியது போல, ஒவ்வொரு கதையைப் பற்றியும் தனித்தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம் தான். விருப்பமும், நேரமுமிருப்பின் வாசித்துப் பாருங்கள்.
வாசிப்பும், பகிர்வும்
~ *திவாகர். ஜெ* ~
16/10/2019

Comments
Post a Comment