கானகக்கன்னி - வாசிப்பு அனுபவம் 87
வாசிப்பு அனுபவம் - 87 நூல் : கானகக் கன்னி ஆசிரியர் : கல்வி கோபாலகிருஷ்ணன் வெளியீடு : சாகித்ய அகாதெமி பக்கங்கள் : 78 விலை : ₹ 45 பல்வேறு மொழிகளிலும் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற சிறந்த நூல்களை அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடும் நிறுவனமான சாகித்ய அகாதெமி பதிப்பகம் நூல்கள் எப்பொழுதும் குறைந்த விலையில் கிடைக்குமென்பதால் ஒவ்வொரு புத்தக திருவிழாவிலும் சாகித்ய அகாதெமி ஸ்டாலில் இருந்து சில பல நூல்களை அள்ளி வருவதுண்டு. அப்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 10 ரூபாய் விலையில் வாங்கி வந்த நூல் தான் *"கானகக் கன்னி"* நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் இது ஏதோ மாயாஜால நூல் என்ற எண்ணத்தில் தான் நான் வாங்கியது. ஆனால் இன்று வாசிக்கையில் தான் தெரிந்தது இது நமக்குள் இயற்கை மீதான அன்பை, பற்றுதலை பன்மடங்கு மெருகேற்றச் செய்யும் மந்திரஜால நூல் தானென்று. இனி கதைக்கு வருவோம்.... காட்டில் ஒரு பெரிய மரத்தை நோக்கி விறகு வெட்டி ஒருவர் கோடரியை வேகமாய் வீசும் போது, "அய்யோ..... அம்மா.....?" என்ற குரல் கேட்டு திடுக்கிறார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாருமில்லை என்று தெரிந்தவுடன் இது...