Posts

Showing posts from September, 2019

துயில் வாசிப்பு அனுபவம்

வாசிப்பு அனுபவம் - 69 நூல் : துயில் ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 589 விலை : ₹ 525 வகை : நாவல் சற்று பொறுங்கள். முதலில் நான் என்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். முன்பெல்லாம் இரண்டாம் காட்சி பேய்ப் படம் பார்த்துவிட்டு தனியாய் வருகையில் நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் யாவும் பேயாய் மாறி ஆட்டம் போடுவதைப் போன்று  கற்பனை செய்து பயப்படுவோம் பாருங்கள். அது போன்ற மனநிலையில் தான் நான் தற்போது இருக்கிறேன். ஒருவேளை இப்புத்தகத்தை நீங்கள் வாசிக்கையில் உங்களுக்கும் இது போன்றதொரு பிரமை தோன்ற வாய்ப்புண்டு. ஆனால், தற்போது என்னைச் சுற்றி நின்று பயமுறுத்துவது பேய்கள் அல்ல. அதை விடவும் கொடுமையான பயங்கரமான நோய்கள். ஆம்..... கற்பனை செய்து பாருங்களேன்.... உங்களைச் சுற்றியுள்ள உலகம் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், கை கால் முடமானோர், எந்நேரமும் புண்ணிலிருந்து சீழும், ரத்தமும் வடியும் நிலையிலிருப்போர், குடியால் கெட்டோர், தகாத உறவுகளால் தீர்க்க இயலா நோய்களை உருவாக்கிக் கொண்டோர் இவர்களால் சூழப்பட்டிருந்தால் உங்களின் நிலை எப்படியிருக்கும்....???? கே...