121 - அப்பா பிள்ளை அம்மா பிள்ளை - கி.ரா.
வாசிப்பு அனுபவம் - 121 நூல் : அப்பா பிள்ளை அம்மா பிள்ளை ஆசிரியர் : கி. ராஜநாராயணன் வெளியீடு : அன்னம் பதிப்பகம் பக்கங்கள் : 141 விலை : ரூ. 65 மலர்களிலிருந்து தேனினை உண்ட வண்டு அந்த மதுவின் மயக்கத்திலேயே நாள் முழுவதும் கிறங்கி கிடப்பதற்கு சமானம் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா. அவர்களின் எழுத்துகளை வாசிப்பது. வாசிக்கையிலும் வாசித்து முடித்த பின்னும் நம்மை ஒரு வித மாய போதைக்குள்ளே சிக்கி மீண்டு வர இயலாது அதைப் பற்றிய சிந்தனையோடே அடுத்து வரும் பொழுதுகளை கழிக்க வைக்க கி.ரா. அவர்களால் மட்டுமே முடியுமென்ற வார்த்தைகளில் எள்முனையளவும் மிகையில்லை. 1970-80 களில் பல்வேறு இதழ்களில் கி.ரா. எழுதிய 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் முதல் சிறுகதை ”வால்நட்சத்திரம்”. பெண் பிள்ளைகளின் உடலியல் ரீதியான வளர்ச்சியை - நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிறுமி என்ற பருவத்திலிருந்து பெரிய மனுசியாய் அவர்கள் கண்ணிமைக்கும் நேரமாய் தோன்றக் கூடும் பொழுதினில் மாறக் கூடிய மாயத்தினை இச்சிறுகதையில் கூறியிருப்பார். அவர்களின் வளர்ச்சியை அவர் இயற்கையோடு ஒப்பிடும் ஒவ்வொரு இடமும் நம்மை சிலிர்...