Posts

Showing posts from May, 2020

மடவளி - வாசிப்பு அனுபவம் 98

Image
வாசிப்பு அனுபவம் - 98 நூல் : மடவளி ஆசிரியர் : கவிப்பித்தன் வெளியீடு : நூல் வனம் பக்கங்கள் : 335 விலை : ரூ. 320 வகை : நாவல் 1. நண்பர்களையும் விரோதியாக்கும் வல்லமை படைத்தது எது? 2. தாயாய், பிள்ளையாய் பழகிய பங் காளிகளையும் பகையாளிகளாய் மாற்றும் சக்தி படைத்தது எது? 3. நேற்று வரை தோள் மீது கைப்போட்டு பேசி பழகியோரையும், எதிரில் முகம் பார்த்தும் சிரிக்காமல் விலகிச் செல்ல வைப்பது எது? 4. குடிசை வீட்டு குடிமக்களையும் கோபுர உச்சிக்குச் சென்றதாய் மயக்கி - மிதப்பில் இருக்க வைத்து மறுநொடியே குப்பைமேட்டில் விழச் செய்யும் வியூகம் வகுக்கத் தெரிந்தது எது? 5. கூழுக்கில்லாதோரையும் வளையோசை கொஞ்சும் குமரிப்பெண்ணின் களிப்போடு சட்டைப் பை நிறைய காசோடு திரியச் செய்யும் சூத்திரம் எது? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்று தான்..... என்னவென்று ஊகிக்க முடிகிறதா உங்களால்....??? ஆம்...... இவையெல்லாவற்றிற்கும் ஒரே பதில்....... *"தேர்தல்"* அதுவும் குறிப்பாய் *"உள்ளாட்சித் தேர்தல்"* மீண்டுமொரு முறை கேள்விகளை வாசித்துப் பாருங்கள். உண்மை தானே?            கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நாமே ந...

சுகவாசிகள் - வாசிப்பு அனுபவம் 97

Image
வாசிப்பு அனுபவம் - 97 நூல் : சுகவாசிகள் ஆசிரியர் : கரிச்சான்குஞ்சு வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள் : 135 விலை : ₹  150 வகை : குறுநாவல்கள்           நூலாசிரியரான கரிச்சான்குஞ்சு தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், சேதனீபுரத்தில் பிறந்தவர்.  இவருடைய இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும். 'கரிச்சான்' என்ற புனைப்பெயர் கொண்ட கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா) மீது கொண்ட பற்றினால் இவர் "கரிச்சான்குஞ்சு" என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.            "சுகவாசிகள்" (மற்றும்) "ஒரு மாதிரியான கூட்டம்" ஆகிய இரண்டு குறுநாவல்கள் இணைந்த நூல் இது.             முதல் நாவலான "சுகவாசிகள்"நாவல் குறித்து.......             தனது மூத்த மகனான கோபாலன் தன்னை செருப்பால் அடித்து கொண்டிருக்கையில் சாலையில் குடிபோதையில் புரண்டு விழும் வீ.என்.எஸ். எனும் சீனுவை தெருவே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கையில், கோபாலனின் ஆசிரியர் "அடப்பாவி! நீயா இப்படி?! என்று அதிர்ச்சியோடு வந்து தாங்கி காப்பாற்றுகிறார்...

அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல - வாசிப்பு அனுபவம் 96

Image
வாசிப்பு அனுபவம் - 96 நூல் : அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல ஆசிரியர் : ச. மாடசாமி வெளியீடு: Books for children பக்கங்கள் : 72 விலை : ரூ. 70 வகை : கட்டுரைகள் "அன்பு என்பது ஒரு தந்திரமா?" என என்னைக் கேட்டால் ஆம் நிச்சயம் அது ஒரு தந்திரம் தான்.....  கொரோனோ விடுமுறையிலும் பிள்ளைகளை நிம்மதியாய் இருக்க விடாமல் ஆன்லைன் வகுப்பு, சிறப்புத் தேர்வு என்றெல்லாம் பெற்றோரும், ஆசிரியர்களும் துன்புறுத்துகையில் இதெல்லாம் தேவையா? என்று அவர்களிடம் வினா எழுப்பினால் அதெல்லாம் அவர்கள் மீது நாங்கள் கொண்ட அளவு கடந்த அக்கரையினால் தானே என்று பின்னணியில் லாலா லாலாலா...... என்று விக்ரமன் பட ஸ்டைலில் உணர்ச்சிப்பூர்வமாய் கூறுமிடங்களில் அன்பு ஒரு தந்திரமாகத்தானே கையாளப்படுகிறது. விரும்பியப் பெண்ணை/ ஆணைத் தான் திருமணம் செய்வேன் என தெளிவாய் - உறுதியாய் இருக்கையில், உன்னை பெத்தவங்களைக் கொஞ்சம் யோசிச்சு பாரு பத்து மாசம் சுமந்தவள், தோளிலும், மார்பிலும் போட்டு வளர்த்தவர், ........ என்றெல்லாம் உற்றார், உறவினர் பக்கம் பக்கமாய் நாட்டைத் திருத்தும் சங்கர் பட பாணியில் வசனம் பேசும் இடங்களிலெல்லாம் அன்பென்பது ஒரு தந்திரம்...