113 - நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள்
வாசிப்பு அனுபவம் - 113 நூல் : நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள் ஆசிரியர் : குன்றில் குமார் வெளியீடு : நக்கீரன் வெளியீடு பக்கங்கள் : 104 விலை : ரூ. 65 நான் எனது கல்லூரிக் காலங்களில் முதன்முறையாக புத்தகம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் தொடங்கிய காலகட்டங்களில் நூலகத்தில் இருந்து எடுத்து வந்தும், காசு கொடுத்து வாங்கியும் அதிகம் வாசித்தவை தன்னம்பிக்கை சார்ந்த நூல்களே. ஏனோ அச்சமயத்தில் இருந்த குடும்ப சூழ்நிலையா அல்லது இயல்பாகவே அந்த பருவத்தினருக்கு இத்தகைய தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற பாதையின் மீதுதான் ஈர்ப்பு ஏற்படுமோ என்னவோ அதிகம் தேடித் தேடி என்னை வாசிக்க வைத்தவை மனதிற்கு ஒரு வகையான தெம்பினை அளிக்கக் கூடிய சுயமுன்னேற்ற நூல்களே. ஆனால், வாசிப்பு கூட கூட இத்தகைய தன்னம்பிக்கை சார்ந்த நூல்களின் பக்கமிருந்த மனம் விலகத் தொடங்கிவிட்டது. ஒருவேளை ஏறக்குறைய எல்லா நூல்களும் ஒரே மாதிரியான குரலில் சில அறிஞர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள் அவற்றிலிருந்து அவர்கள் மீண்டு எழுந்து வந்தது என அதே பழைய கள்ளையே புதிய மொந்தையில் ஊற்றிக் கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வா...