அழகோ அழகு - வாசிப்பு அனுபவம் 88
வாசிப்பு அனுபவம் - 88
நூல் : அழகோ அழகு
ஆசிரியர் : வெ. இறையன்பு
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள் : 116
விலை : ₹ 60
மகுடியின் முன் மயங்கும் பாம்பினைப் போன்று திரு. வெ. இறையன்பு அவர்களின் பேச்சும், எழுத்தும் நம்மை கிறங்கடிக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தவை. தன்னம்பிக்கை சற்றே தளரும் போதெல்லாம் அவரது பேச்சைக் கேட்டு உத்வேகம் பெற்ற நாட்கள் பல உண்டு கல்லூரிக் காலங்களில்.
14 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு வகையில் பேசத்தக்க சிறப்பு வாய்ந்தவை.
முதல் சிறுகதையான *"எட்டாவது மலைப் படைப் பிரிவு"* என்ற சிறுகதை ஆனது மேஜர் பிரகாஷ் ஜாவிற்கும் அவருக்கு சமையல் செய்யும் சமையல்காரரான பிரேம் சிங்கிற்கும் இடையேயான உறவைப் பற்றியது. பிரேம் சிங் தனது மனைவியின் பிரசவத்தை எதிர்நோக்கி வாரம் ஒரு கடிதம் எழுதுகிறான். மனைவியின் நிலை பற்றி சரியாய் தெரியாத தருணத்திலும் தனது பணியிலிருந்து அவனது கவனம் விலகவில்லை. அவனது உணர்ச்சிகளை மிக அழகாக இந்நூலில் விவரித்திருப்பார் ஆசிரியர். எதிர்பாராத, தாங்கவியலா சோகம் பிரேம் சிங்கிற்கு ஏற்படும் பொழுது அதை ப்ரகாஷ் ஜா அவனிடம் சொல்ல நேரும் தருணம் துயரமானது. சிறுகதையில் வரும் கடைசி வரி இது. *"சோகத்தை தகவலாக அளிப்பவனின் துயரம் அனுபவிப்பவனின் துயரத்திலும் அதிகம்"*
இரண்டாவது சிறுகதையான *"இறந்தால் ஆயிரம்"* என்ற சிறுகதை குடும்பத்திற்கு உதவாத குடிகாரனான ஆனால் திறமையான ஒரு டிரைவரான முருகன் பற்றியது. ஒரு எதிர்பாரா விபத்தில் அவனுக்கு ஏற்படும் காயத்தை விட அவனது உயிர் போயிருந்தால் இன்னும் நலமே என அவன் மனைவி எண்ணுவது அனைத்து குடிகாரர்களுக்கும் சமர்ப்பணம்.
மூன்றாவது கதையான *"கைமுறுக்குக்காரி"* என்ற கதை சேமிப்பின் அவசியத்தை உணர்த்துவதோடு, சேமிப்பு ஏதுமில்லாமல் அன்றைய பொழுது நகர்ந்தால் போதும் என மகிழ்ச்சி என எண்ணி ஊதாரித்தனமாக இருப்பதால் நன்றாய் வாழ்ந்த ஒரு குடும்பம் கணவனின் இறப்பிற்குப் பிறகு எத்தனை துயரப்படுகிறது என்பதை கூறுகிறது. மேலும் பெரிய நிறுவனங்கள் ஊறுகாய், முறுக்கு போன்ற சிறிய தொழில்களில் இறங்கி தங்களது விளம்பர வியாபார யுக்தியால் குடிசைத்தொழிலாக இவற்றைச் செய்யும் ஏழை எளிய குடும்பங்களின் நிலையை எவ்வளவு சீரழிக்கிறது என்பதையும் இந்த கைமுறுக்குக்காரி கதை நமக்கு நன்றாய் உணர்த்துகிறது.
*"தேடல்"* மற்றும் *"சன்யாஸ்"* ஆகிய இரண்டு சிறுகதைகளும் துறவறத்தின் மேன்மையையும், துறவறம் என்பது எந்தவித தொழிலும் இல்லாதவர் மேற்கொள்ள ஒரு வழி என்பது அல்ல அது ஒரு மார்க்கம், அது ஒரு வாழ்வியல் என்பதையும் உணர்த்துகிறது.
கடவுளைப் பார்த்தே தீருவது என்ற அசாத்திய நம்பிக்கையுடன் மிகுந்த ஆன்மீகத்தன்மையுடன் திகழும் ஒருவன் கடவுளை பார்த்த பிறகு எப்படி அனைவரையும் போன்ற ஒரு சாதாரண மனிதனாக மாறிவிடுகிறான் என்பதைக் கூறுகிறது - *"கடவுள்"* என்ற சிறுகதை.
உடல் அழகு என்பது நிரந்தரம் அல்ல. அது என்றைக்கும் அழியக் கூடியது. அது ஒரு மாய உலகம். ஆனால் படிப்பறிவும், பட்டறிவும் மட்டுமே என்றைக்கும் நீடித்து நிலைக்கும் அழகு என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது *"அழகோ அழகு"* என்னும் சிறுகதை.
நாங்களெல்லாம் உயர்சாதி அவர்கள் எங்களுக்குக் கீழ்தான் என்று சாதிப் பெருமை பேசும் உதவாக்கரைகள் கூட, கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, உதவித்தொகை என்று வரும்பொழுது தங்களின் சாதி தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்தால் தான் இவையெல்லாம் கிடைக்கும் என்பதால் தங்களை தாழ்த்தப்பட்டோர் என்று கூறிக் கொள்ளவும், அப்பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டுமென போராடவும் தயங்குவதே இல்லை என்ற இன்றைய உண்மை நிலையை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது - *"வழிவிடுங்கள்"* என்ற சிறுகதை.
*"நேர்மை"* என்ற சிறுகதையில் வரும் கீழ்கண்ட இந்த வரிகளை ஏனோ இரண்டு மூன்று முறை நான் திரும்பத் திரும்ப வாசித்தேன்.
*" எழுதுவது ஒரு வெளிப்பாடு. அதையே நாம் கூடுதல் தகுதியாக நினைத்துக் கொள்ளக்கூடாது. இன்னும் சொல்லப்போனால் எழுதுவது ஒரு வகையான தகுதியின்மை கூட. நாம் நினைத்த மாதிரி வாழும் உரிமையை அது பறித்துக் கொள்கிறது. நாம் எழுதுகிற படி வாழ்கிறோமா என்று மற்றவர்கள் எட்டிப் பார்ப்பதற்கு ஏதுவாக நாமே நம்முடைய ஜன்னல்களை திறந்து வைத்து விடுகிற முன்மொழிவு அது. உங்களுக்கு சோறு போடுகிற பணியில் ஒழுங்காக பணியாற்றுவது தான் முதலில் நாம் கடைபிடிக்க வேண்டிய நேர்மை. அலுவலக நேரத்தில் கோப்புகள் குவிந்து கிடக்க இலக்கியப்பணி பார்ப்பது உச்சபட்ச நேர்மையின்மை. இலக்கிய நேர்மை என்பது ஓர் அபிப்ராய பேதம் மட்டுமே. நன்றாக இல்லாத ஒன்றை சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி விட்டால் ஒன்றும் ஆகாது. மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிற நாம் அந்த ஒவ்வொரு ரூபாய்க்கும் அக்கவுண்ட்டபிளாக இருப்பது கடமை. நேர்மை என்பது இலக்கியத்தில் மட்டும் இருந்தால் போதாது. அது எல்லாவற்றிலுமே இருக்க வேண்டிய அடிப்படை பண்பு"*
இவ்வரிகள் சந்திரபிம்பன் மித்ரசத்ருவிற்கு கூறும் அறிவுரையாக மட்டும் எனக்கு தோன்றவில்லை. அரசுப் பணியில் இருந்துகொண்டே தன் பணியைச் சரியாக செய்யாமல் இலக்கியம் என்ற போர்வையில் தனது பணிக்கு நேர்மையாக இல்லாத ஒவ்வொருவருக்கும் பொருந்தக்கூடிய வரிகள் என்றே கருதுகிறேன் நான்.
*"புறக்கணிக்க முடியாத அளவிற்கு வளர்வது ஒன்று தான் நம்மை திடப் படுத்திக் கொள்வதற்கு வழி."*
*"எதேச்சையான சந்திப்புகள் தான் இனிமையை தரமுடியும். திட்டமிட்ட முயற்சிகள் அல்ல"* என்பதை போன்ற நம்மை கவரும் பல வரிகளைக் கொண்ட சிறுகதைகளை தன்னகத்தே கொண்டது தான் *"அழகோ அழகு"* என்ற இந்த நூல்.
வாசியுங்கள் - வெறுமையைப் போக்குவதற்காக மாத்திரமல்ல. வெல்ல முடியும் நம்மாலும் என்ற தன்னம்பிக்கையை பெறுவதற்காகவும்.
~ வாசிப்பும், பகிர்வும் ~
~ *திவாகர். ஜெ* ~
02/04/2020

Comments
Post a Comment