மனுசங்க - வாசிப்பு அனுபவம் 89
வாசிப்பு அனுபவம் - 89
நூல் : மனுசங்க
ஆசிரியர் : கி. ராஜநாராயணன்
வெளியீடு : அன்னம் பதிப்பகம்
பக்கங்கள் : 127
விலை : ரூ. 100
ஒரு சிறு குழந்தையினை ஐஸ்கிரீம் கடையில் விட்டுவிட்டு உனக்குத் தேவையானதை எல்லாம் எடுத்து சாப்பிடலாம் எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று கூறினால் அக்குழந்தையின் மகிழ்ச்சி எப்படி இருக்கும்.......😀 ஒரு வயதான நீரிழிவு நோயுள்ள பெரியவரிடம் இன்றைக்கு ஒரு நாள் மட்டும் நீங்கள் விரும்பியதை எல்லாம் சாப்பிடலாம் என்று மருத்துவர் கூறினால் அவரது மனநிலை எத்தனை உவப்பானதாக இருக்கும்.....😊 ஒரு இளைஞனிடம் அவன் விரும்பும் பெண் தானே முன்வந்து அவள் காதலை அவனிடம் தெரிவிக்கையில் அந்த இளைஞனின் இதயம் எத்தனை குதூகலத்தில் துள்ளிக் குதிக்கும்.......😍 அப்படித்தான் எனக்கும் திரு. கி.ரா. அவர்களின் நூலை வாசிப்பது என்பதும்...😀😊😍
பொதுவாகவே கி.ரா. அவர்களின் நூல்களில் மனிதர்களையும் அவர்களது குணாம்சங்களையும் பற்றியுமே பெரும்பாலும் பேசியிருப்பார். அதிலும் இந்நூலின் தலைப்பே *"மனுசங்க"* என்பதுதான். அப்படியாயின் இந்நூலைப் பற்றி நாம் மேலதிகமாக கூற வேறென்ன இருக்கப் போகிறது. ஆம் அதே தான்... மனிதர்களைப் பற்றித்தான் இந்நூலும் பேசுகிறது.
இந்நூல் வயதான 3,4 தாத்தாக்களைப் பற்றியது. ஒவ்வொருவரைப் பற்றியும் கி.ரா. அவர்கள் கூறும் பொழுது அந்த அனைவருமே ஏதோ நம் பக்கத்து வீட்டு தாத்தாக்கள் போலவும், இல்லை.... இல்லை..... நம் தாத்தாக்களாகவே நாம் அவர்களின் பேரப்பிள்ளைகளாகவே மாறிவிடுகிறோம்.
அதிலும், நாவலின் ஒவ்வொரு இடத்திலும் வெறுமனே அந்த வயசாளிகளைப் பற்றி மட்டும் கூறாமல் ஆங்காங்கே ரசிகமணி போன்ற நபர்களோடு தனது அனுபவங்களையும் கி.ரா. அவர்கள் கூறியிருப்பது நாவலோடு சேர்த்து அவரின் வாழ்வனுபவமாகவே நம் கண் முன் விரிகிறது.
நாவலில் கி.ரா. அவர்கள் விவரிக்கும் முதல் வயசாளி சீனி நாயக்கர். சீனி நாயக்கர், ஆரம்பத்தில் எவ்வளவு வளமாக வாழ்கிறார். இருப்பது எல்லாம் அழிந்தபின் அவர் படும் பாடுகளையும் படிக்கையில் நம் கண்களிலும் நீர் கோர்க்கிறது. கி.ரா. அவர்களின் எழுத்தில் அத்தனை நேர்த்தி. சீனி நாயக்கரின் அக்காள் மகள் நாச்சியா. ஆனால் சிறுவயதில் இருந்தே அவளை தன் உடன்பிறந்தவள் போல் பார்த்ததாலோ என்னவோ அவளை திருமணம் செய்ய சீனி நாயக்கர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இவரின் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்த நாச்சியாரோ வேறு வழியின்றி வேறொரு இடத்தில் திருமணம் செய்து கொடுக்க பட்டு சென்றுவிடுகிறாள். அந்திம காலத்தில் நாச்சியாரின் வீட்டிற்கு அவர் செல்லும் பொழுது நாச்சியா வார்த்தைகள் அற்று அழும் பொழுது நம்மை அறியாமல் நம் கண்களின் ஓரத்தில் நீர் துளிகள் எட்டிப் பார்க்கின்றன.
கி.ரா. கூறுகிறார், *"ஏன் இவரைப்பற்றி எழுத்தில் பதிவு செய்தாய் என்று கேட்பவருக்கு பதில் என்னிடம் இல்லை. சீனி நாயக்கர் அபூர்வ மனிதர் அல்ல. எந்த வகையிலும் அவர் சிறந்தவர் இல்லை தான். குட்டிச் சுவராகி போனவர்"*
இப்படி கூறுகிறாரே தவிர சீனி நாயக்கர் பற்றி 50 பக்கங்களுக்கு மேலும் பேசி இருக்கிறார்.
அடுத்ததாக *"தூங்கா நாயக்கர்."* பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா? ஆம். ஆளும் அப்படிப்பட்டவர் தான். சீனி நாயக்கருக்கு நேரெதிரான வாழ்க்கை இவருடையது. இவரும் இவரது மனைவி உத்தியம்மாவின் வாழ்க்கையையும் வாசிக்கையில் நம் உடம்பு சற்றே நம்மை மீறி மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடுகிறது.
*"துரசாபுரம் தாத்தா", "போலய்யத் தாத்தா"* என்று இன்னும் பல வயசாளிகளைப் பற்றியும் இந்நூலில் பேசுகிறார் ஆசிரியர். ஒவ்வொருவரைப் பற்றியும் அவர் கூறும் பொழுதும் முதலிலேயே நாம் கூறியது போல நம் தாத்தாக்களின் நினைவுகள் நம்மில் வந்து ஊசலாடுகிறது. அத்தோடு நம் தாத்தாவிடம் நாம் கற்ற அல்லது பெற்ற பல சங்கதிகள் நம் நினைவில் வந்து குதூகலம் அடைய செய்கின்றன.
"தமிழ் இந்து" நாளிதழில் "மண்மணம்" என்ற பகுதியில் கி.ரா. எழுதி வந்த மனுசங்க தொடரின் நூல் வடிவமே இந்நூல். 93 வயதிலும் ஒரு மனிதர் நாளிதழ் ஒன்றுக்கு தொடர் எழுதி இருக்கிறார் என்பதை அறியும் பொழுது உடல் சிலிர்க்கிறது.
இறுதியாக, நூலில் இருந்து சில வரிகள்.....
--> *சிறந்த உழைப்பாளிகளையும் அதிலும் யோக்கியமானவர்களை பெண்ணைப் பெற்றவர்களும், பெண்களும் கண்டுபிடித்துவிடுவார்கள்.*
--> *அதிகம் பேசாதவருக்கு எப்போதும் மதிப்புதான்*
--> *குழந்தைகளும், பெண்களும் தூங்கும் பாங்கே ஒரு அழகு தான். ஒவ்வொரு முகமும் தூங்கும்போது ஒரு மணத்தை வெளியிடும். கலைக்கக்கூடாத தூக்கம் அது*
--> *பொறணி பேசவோ உட்கார்ந்து பேச என்றோ வீடு விட்டு வீடு அல்லது தெரு விட்டு தெருவோ போகிறது பெண்களிலும் உண்டு ஆண்களிலும் உண்டு. இது ஒரு பேச்சு சுவாரசியம். இதில் ஒரு சொகம் கண்டுவிட்டால் இந்த ஆட்டமும் ஒரு விளையாட்டைப் போல தான். பேசிச் சொகம் கண்ட நாக்கும் ஆடிச் சொகம் கண்ட காலும் நிற்காது தான் ஒரே இடத்தில்*
--> *ஒரு கிராமமானது எதையும் பார்க்காதது போல இருந்தாலும் எல்லாத்தையும் கவனிச்சிக்கிட்டே இருக்கும்*
--> *எப்போதுமே அம்மாக்கள் செய்யும் ருசி மகிமைகளை மருமகள்களிடம் புகழ்ந்து சொல்லக்கூடாது*
--> *அடைமழைக் காலங்களில் ஊரின் தோற்றமே மாறிப்போய் விடும். அது எமனின் அறுவடைக்காலம். வயோதிகர்கள் தொடர்ந்து செத்துக் கொண்டிருப்பார்கள். வீடும் கொஞ்சம் சுத்தமாகிவிடும்*
--> *ஊர் எல்லாத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கும்; அப்படி ஒரு உயிர்ப்பு ஊருக்கு*
வாசிப்பும், பகிர்வும்...
~ *திவாகர். ஜெ* ~
06/04/2020

Comments
Post a Comment