ஓர் இரவு - வாசிப்பு அனுபவம் 92
வாசிப்பு அனுபவம் : 92
நூல் : ஓர் இரவு
ஆசிரியர் : அறிஞர் அண்ணா
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 104
விலை : ரூ. 40
பேரறிஞர் அண்ணா அவர்களால் ஒரே இரவில் எழுதப்பட்ட நாடகம் *"ஓர் இரவு."* இந்நாடகத்தின் கதையும் கூட ஒரே இரவில் நடப்பது என்பது தான் நூலின் சிறப்பு. இந்நாடகம் பின்னர் அறிஞர் அண்ணா அவர்களின் கதை வசனத்தோடு திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது.
நாடகமானது, மிக ரம்மியமான மனம் மயக்கும் ஒரு முழு நிலவு நாளில் நடக்கிறது. ஒரு பெண்ணும் அவளது கணவனும் ஒரு முழு நிலவு நாளில் மகிழ்ச்சியாய் பேசிக்கொண்டிருப்பதில் இருந்து நாடகம் தொடங்குகிறது. ஆனால் இந்த முழு நிலவானது எல்லோருக்கும் ஒரே மாதிரியான மகிழ்ச்சியை தருவதாக அமைவது இல்லை அல்லவா? ஆம்.... மனதால் ஒன்று சேர்ந்த காதலர்களுக்கு இந்த நிலவு இன்பம் கொடுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான பொன்னிலவாய் அமைவது போலவே, பிரிந்த காதலர்களுக்கு அதே நிலவு சோகத்தை மேலும் கூட்டும் ஒரு தீப்போல் சுடும் நிலவாயும் அமைந்து விடுவதும் உண்டு தானே.
அதுபோலவேதான், இரண்டு வெவ்வேறான நிகழ்ச்சிகளை அடுத்தடுத்த காட்சிகளில் அண்ணா அறிமுகப்படுத்துகிறார்.
முதல் காட்சியில், மகிழ்வாக இருக்கும் ஒரு கணவன் மனைவியை காட்டும் அறிஞர் அண்ணா, அடுத்த காட்சியிலேயே குதிரை ரேஸில் பணம் கட்டி வாழ்வை சீரழித்து பிரிந்துசென்ற கணவனின் வருகையை நோக்கி காத்திருக்கும் ஒரு மனைவியின் வருத்தத்தையும் பதிவு செய்கிறார்.
அதேபோன்று அந்த முழு இரவு நாளில் ஊர் சாவடியில் கூடி ஊர் வம்பர்கள் தமக்குள்ளே பேசிக் கொண்டிருப்பதையும் காட்டுகிறார். அங்கே அண்ணாவின் பகுத்தறிவு எழுத்து மிளிர்வதைப் பாருங்கள்.
*பழனி: சைவம் பெரிசா? வைஷ்ணவம் பெரிசா? என்பது பற்றி முன்னாலே ஒரு நாள் எனக்கும், பெருமாள் பிள்ளைக்கும் தர்க்கம் நடந்தது தெரியுமா?*
*வெங்கடேசன்: நடந்ததா? என்ன முடிவுக்கு வந்தீங்க?*
*பழனி: என்ன முடிவா? முடிவில் அவன் ஆஸ்பத்திரிக்கு போனான் கட்டு கட்டி கொள்ள. நான் மாஜிஸ்திரேட் கோர்ட்டு போனேன் கேஸ் கட்டை தூக்கிக்கிட்டு.*
பாருங்கள். சைவ வைஷ்ணவ பக்த சிரோன்மணிகளுக்கு இடையே பிரச்சனை ஆண்டாண்டு காலமாய் நீடித்துக் கொண்டே வருவதை இதைவிடவும் எளிதாய் எள்ளி நகையாட அண்ணாவையன்றி வேறு யாரால் முடியும்?
இவையெல்லாம் நாடகத்தின் முன்னோட்டங்கள் மட்டுமே. இதற்குப் பின் தான் நம் நாடக கதைமாந்தர்களின் உண்மையான நாடகமே தொடங்குகிறது. நாடகத்தின் கதை இதுதான்.....
டாக்டர் சேகரும், சுசிலாவும் காதலர்கள். இன்பமான இந்த முழு இரவு நாளிலே அவர்கள் பூங்காவில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயத்தில் சுசிலாவின் அப்பாவான கருணாகரத்தேவரை அவரின் இறந்த மனைவியின் சகோதரனான ஜமீன்தார் ஜெகவீரர் மிரட்டிக் கொண்டிருக்கிறார். சுசீலாவை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று. கருணாகரதேவர் முன்னர் செய்த ஒரு குற்றத்தினை சாக்காய் வைத்து அவரை வஞ்சகமாய் ஏமாற்றி, மிரட்டி சுசீலாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் ஜமீன்தார் ஜெகவீரர். அதை சுசீலா மறுக்கிறார். ஆயினும் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியின்றி சம்மதிக்கிறார்.
விருப்பமில்லா ஒருவனுடன் வாழ விரும்பாமல் விஷம் குடிக்க நினைக்கையில் திருடனாக வரும் ரத்னத்தின் உதவியோடு ஜெகவீரரை ஏமாற்ற சுசீலா ஒரு திட்டம் போடுகிறார். ஆனால் அந்த திட்டம் அவளுக்கு எதிராகவே அமைந்துவிடுகிறது. சுசீலாவை டாக்டர் சேகர் தவறாக நினைத்து விடுகிறார். அதிலிருந்து சுசீலா மீண்டாரா? இல்லையா? சேகர் உண்மையை உணர்ந்தாரா? கருணாகரத் தேவரை ஜெகவீரரிடமிருந்து டாக்டர் சேகர் மீட்டாரா? இல்லையா? சுசீலாவும், சேகரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? இடையில் திருடனாக வந்த ரத்னத்திற்கும் கருணாகர தேவருக்கும் என்ன உறவு? என்பதை எல்லாம் கதையை வாசிக்கையிலேயே நம்மால் ஆங்காங்கே யூகிக்க முடிந்தாலும் 1950 காலகட்டங்களை வைத்து யோசித்துப் பார்க்கையில் இது ஒரு அழகான திரைக்காவியமாகவே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது.
கதையை விட, நம்மை நூல் முழுவதும் கவர்வது அண்ணாவின் எழுத்தே. பணக்காரர்களும், பகட்டுவாதிகளும் முழுநிலவு நாளில் மகிழ்ச்சிகரமாக இருக்க, அவர்களால் வாழ்வை இழந்த ஏழைகள் அந்த பொன்னெழில் கொஞ்சும் மோகன வேலையிலும் குடிக்கும், மற்ற அநாகரிக செயல்களுக்கும் தங்களை அடிமையாக்கி எவ்வாறு வருந்துகின்றனர் என்பதை நூல் முழுவதும் தனது எழுத்துக்களின் மூலம் வலிமையாக பதிவு செய்கிறார் அறிஞர் அண்ணா.
இரவு என்பது பணக்காரனுக்கும் ஏழைகளுக்கும் எப்படி இருக்கிறது என்பதை ரத்னம் கதாபாத்திரத்தின் வாயிலாக அறிஞர் அண்ணா கூறுகிறார் கேளுங்கள்.
*"நீங்களென்ன கண்டீர்கள். இராத்திரி வேலைன்னா, சங்கீதம், சரசம், குடும்பத்தில் சந்தோஷம் இவைகள் தான் இருக்குமென்று நினைக்கிறீர்கள். இவைகளைத்தான் பார்த்திருப்பீர்கள். இரண்டு உலகமல்லவா இருக்கிறது; உங்க உலகிலே இரவு 10 மணி அடித்தா தீர்ந்தது; சந்தடி கிடையாது. எங்க உலகம் இருக்கே, அதுக்கு இரவு மணி பத்தானா தான் விடியுதுன்னு அர்த்தம். தெருக்கோடிச் சண்டை, வீட்டு மேலே கல் வீசுவது, எல்லாம் அப்போ தான் ஆரம்பமாகும். நீங்களெல்லாம் காலையிலேயே காப்பி சாப்பிட்டதும் சுறுசுறுப்பா வேலை செய்றீங்க. எங்க உலகத்திலே சுறுசுறுப்பு ராத்திரி பத்து அடிச்சதும் கள்ளோ, சாராயமோ போட்டுகிட்டா தீர்ந்தது. கோட்டை எல்லாம் தூளாகும்."* என்று எழுதுகிறார்.
இரவின் மறுபக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை அண்ணாவின் வார்த்தைகளிலிருந்து உணரமுடிகிறது.
கருணாகரத் தேவரால் ஏமாற்றப்படும் சொர்ணம் பாத்திரம்தான் இந்த நாடகத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரம். பெண்களின் அன்பு எத்தனை ஆழமானது, ஒருவரின் மீது அன்பு செலுத்திவிட்டால் அதை அவர்கள் வாழ்நாள் எல்லாம் எவ்வளவு உண்மையோடு போற்றிப் பாதுகாக்கிறார்கள் என்பதை சொர்ணம் பாத்திரத்தின் வாயிலாக அறிய முடிந்தது. அதேநேரம், அத்தகைய அன்பு ஆண்களின் மனதில் ஏன் இல்லாமல் போனது என்று நினைக்கையில் ஆண்களின் மீது கோபமே எழுகிறது.
இந்த புத்தகத்தை வாசிக்க உங்களுக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் போதும். அவ்வளவு உற்சாகமாகவும் வேகமாகவும் உங்களால் வாசித்துவிட முடியும். ஆனால் அது உங்கள் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் பல ஆண்டுகள் கழித்தும் உங்கள் நினைவில் நின்று கொண்டே இருக்கும்.
கல்லூரி காலங்களில் ஒருமுறை படித்த நூல் தான் இது. படித்த கல்லூரியும் அறிஞர் அண்ணாவின் பெயரிலேயே அமைந்ததாலோ என்னவோ இயற்கையாகவே அண்ணாவின் மீது ஒரு பெரிய பற்றுதல் ஏற்பட்டது. அப்பொழுது ஏறத்தாழ அவரின் அனைத்து நூல்களையும் வாசித்து முடித்தது தான். மீண்டும் ஒரு முறை அவரின் நூல்களை மறு வாசிப்பிற்கு உட்படுத்தினால் என்ன என்ற எண்ணத்தில்தான் இந்த ஓர் இரவு நாடகத்தை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தது வாசிக்கையிலேயே கல்லூரி காலங்களில் வாசித்ததை விடவும் வேறு ஒரு புதிய அனுபவத்தை தற்போது மறுவாசிப்பின் மூலம் பெற முடிந்தது. மிகச் சிறந்த ஒரு நாடகம் இந்த ஓர் இரவு.
தொடர்ந்து வாசியுங்கள், குறிப்பாக அண்ணாவை......
வாசிப்பும், பகிர்வும்.
~ *திவாகர். ஜெ* ~
15/04/2020

Comments
Post a Comment