வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்
வாசிப்பு அனுபவம் - 82 நூல் : பொன்னியின் செல்வன் ஆசிரியர் : கல்கி வெளியீடு : சிவகுரு பதிப்பகம் பக்கங்கள் : 2351 (5 பாகங்களும் சேர்த்து) விலை : ₹ 700 பல கோடி கரங்களில் பட்ட பின்னும் ஒரு ரூபாய்த்தாள் எவ்வித அழுக்குமின்றி அச்சிட்ட அந்நாளிலிருந்த அதே பளபளப்புடன் இருக்க இயலுமா? நாடு, நகரம் நடுநடுவே பல நச்சுக் கழிவுகள் வெளியேற்றும் ஆலைகள் பலவற்றைக் கடந்தபின்னும் ஒரு நதி வானிலிருந்து வெளிவந்த அதே கோளத்துளியின் ஒழுங்கோடு மாசு மருவின்றி தூய நீராய் கடல் அடைய இயலுமா? ஆம். இயலும். இதோ லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்தப் பின்னும் மாய்ந்து மாய்ந்து அதைப் பற்றி பேசிய பின்னும், பலவாறு எழுதிய பின்னும் இன்றும் ஒரு நூல் நூற்றுக்கணக்கில் - ஆயிரக்கணக்கில் புத்தக கண்காட்சிகளில் விற்பனையாகிக் கொண்டும் பலரால் படிக்கப்பட்டு, பாராட்டப்பட்டுக் கொண்டும் தன்னொளியில் குன்றாமல் இருக்கின்றதென்றால் அது நிச்சயம் கல்கியின் *"பொன்னியின் செல்வன்"* மட்டுமே. இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி முடிந்தபின் இந்து தமிழ்திசை நாளிதழ் அதிகம் விற்பனையான முதல் 10 நூல்களின் பட்டியலை வெளியிட்டு அதில் கீழே குறி...
Comments
Post a Comment