பேசும் தாடி - வாசிப்பு அனுபவம் 86
வாசிப்பு அனுபவம் - 86
நூல் : பேசும் தாடி
ஆசிரியர் : உதய சங்கர்
வெளியீடு :வானம் பதிப்பகம்
பக்கங்கள் : 104
விலை : ₹ 80
வகை : சிறார் நாவல்
சிறு வயதிலிருந்தே மீசையின் மீதும், தாடியின் மீதும் மிகுந்த ஆர்வமுண்டு எனக்கு. ஆயினும் தலையிலோ அல்லது தாடையிலோ சற்று அதிகப்படியாய் முடி இருந்து விட்டாலும் வீட்டில் விளக்குமாறுகள் தாறுமாறாய் பறக்குமென்பதால் தாடி இன்று வரை வைத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே இருந்து வருகிறது எனக்கு. அதனால் தானோ என்னவோ பெரிதாய் தாடி வைத்திருப்பதும் பெரியாரை எனக்கு பிடிப்பதற்கும் தனியொரு காரணமாய் அமைந்திருக்குமோ என நான் எண்ணுவதுண்டு. நூலின் பெயரைப் பார்த்தவுடனே இத்தகு எண்ணமெல்லாம் உள்ளுக்குள் சுழன்றதாலேயே தான் இப்புத்தகத்தை வாங்கியது. சரி... நம்ம கதையெல்லாம் இங்கு எதற்கு.....? நூலின் கதைக்கு வருவோம் ...
ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் பேரப்பிள்ளைகளான சுகானாவையும், சூர்யாவையும் பார்ப்பதற்காக தாங்கள் தங்கியுள்ள கருமலை எனும் மலையடிவார கிராமத்திலிருந்து தாத்தாவும் ஆச்சியும் வருவர். ஒவ்வொரு முறை வரும்போதும் ஒரே ஓயாத விளையாட்டு தான் சுகானாவிற்கும் சூர்யாவிற்கும். இதில் தாத்தா பறவைகள், விலங்குகள், தாவரங்கள் குறித்தும் பல்வேறு இயற்கை தகவல்கள் குறித்தும் தன் பேரப் பிள்ளைகளுக்குக் கூறுவார். இது அவர்களுக்கு மட்டுமல்ல. நமக்கும் தான்.
இந்த முறை விடுமுறைக்கு தாத்தாவும், ஆச்சியும் வந்திருந்தபோது தாத்தாவின் தாடி தனியே பேசுவதையும், சிரிப்பதையும் கண்ட போது முதலில் சுகானாவும், சூரியாவும் பயந்து போயினர். பின்னர் அதன் உண்மை குறித்து அறிந்தபோது ஆச்சரியமும் பெரும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
அந்த தாடி எப்படி பேசியது என்று கூறலாமா வேண்டாமா????🤔🤔🤔 வேண்டாம் வேண்டாம் இந்த விடுமுறையில் நமக்கு வேறென்ன வேலை? நீங்களே தான் ஆர்வமுடன் நூலை வாசித்து அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ளப் போகிறீர்களே. பின் நான் வேறு எதற்கு அந்த ஆர்வத்தைக் குலைக்க வேண்டும்?
சுகானாவும், சூர்யாவும் தாத்தாவுடன் எறும்பாகவும், தேனீயாகவும், வண்ணத்துப்பூச்சியாகவும் மாறி அவற்றின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதாக நாவல் நகர்கிறது. உண்மையில் இது ஏதோ சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நாவலாக மாத்திரம் இல்லாமல், பல்வேறு அறிவியல் தகவல்களையும் போகிற போக்கில் கூறி படிப்போரை உயிரிகளின் மீதும், இயற்கையின் மீதும் ஆர்வம் கொள்ள செய்வதில் நூலாசிரியர் மிளிர்கிறார்.
தாத்தாவின் தாடி மட்டும் மாயம் செய்யவில்லை. ஆச்சியின் சுருக்குப்பையும் மாயாஜாலம் புரிகிறது. அதைப் பற்றி நான் இதுவரை எதுவும் உளறிவிடவில்லை தானே? மாட்டேன் மாட்டேன்..... படித்து மாய உலகில் நீங்களே நுழைந்து ரசியுங்கள்.
*"விலங்குகள், பறவைகள் இன்னமும் இயற்கையோடு இணைந்து இயற்கையாக வாழ்கின்றன. அதனால் அவைகளுக்கு பேராசை கிடையாது. நாளைக்கு...... நம்முடைய வாரிசுகளுக்கு..... சேர்த்து வைக்க வேண்டும் என்ற பேராசை கிடையாது. மனிதர்கள் இயற்கையை விட்டு விலகி பேராசை பிடித்து அவர்களே உருவாக்கிய பணத்தைத் தேடி ஓடுகிறார்கள். அதனால் தான் அவர்களுடைய வாழ்க்கையும் அப்படியே இருக்கிறது"* - சூர்யாவிடம் தாத்தா கூறும் இந்த வரிகள் அந்த சிறுவனுக்கானது என்று மட்டும் எப்படி நாம் எண்ண முடியும்? இது நம் எல்லோருக்குமானதும் கூட அல்லவா?
இவ்விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கவும், குழந்தைகளுக்கு கதைகள் கூறி அவர்களை தம் பக்கம் கவர விரும்புவோரும் வாசிக்க வேண்டிய நூல் - உதயசங்கரின் *பேசும் தாடி*
வாசிப்போம்..... வாழ்வில் உயர்வோம்....
வாசிப்பும், பகிர்வும்...
~ *திவாகர். ஜெ* ~
31/03/2020

Comments
Post a Comment