புறாக்களை எனக்கு பிடிப்பதில்லை - வாசிப்பு அனுபவம் 85
வாசிப்பு அனுபவம் - 85
நூல் : புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
ஆசிரியர் : லாவண்யா சுந்தரராஜன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 127
விலை : ₹ 150
எதார்த்தமாய் அன்றாட வாழ்வில் நடப்பவற்றையே வார்த்தைகளில் வசீகரமேற்றி வாசிக்கத் தூண்டும் சிறுகதைகளாய் தந்திருக்கிறார் நூலாசிரியர் லாவண்யா சுந்தரராஜன்.
சில்லறை, முற்றத்து அணில், பயணங்கள்.... உள்ளிட்ட ஆசிரியரின் வெவ்வேறு இதழ்களில் வெளிவந்த 11 சிறுகதைகளின் தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கிறது *"புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை"* என்ற இந்த நூல்.
கடைசி சிறுகதையான, செண்பா சித்தியைத் தவிர மற்ற 10 கதைகளும் பெண்கள் தாங்களே சொல்வது போல அமைந்துள்ளது. செண்பா சித்தி கதையிலும் கூட ஆண் கதையைக் கூறுவது போல இருப்பினும் அதுவும் முழுக்க ஒரு பெண்ணினைச் சுற்றிய கதையே.
சின்ன லட்சுமி சிறுகதையில் வரும் வேலாம்பா, தான் மிகப் பிரியமாய் நேசித்து வளர்த்த வாழைமரத்தின் குலையினை திருட்டுத்தனமாய் யாரோ பறித்துச் சென்றுவிட மகவு இழந்த தாயாய் துடிக்கிறாள். அக்கதையில் வேலாம்பா வாழை மீது கொண்டிருக்கும் பாசத்தைப் பார்க்கையில் என் வீட்டிலும் என் அம்மா பார்த்து பார்த்து பலவித செடிகளை வளர்ப்பதே கண்முன் விரிந்தது. வேலாம்பாக்களும் நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்தே இருக்கிறார்கள். நாம் தான் இயற்கையின் மீதான அவர்களின் பாசத்தை உணர மறுக்கிறோம்.
இந்த சிறுகதைத் தொகுப்பில் நான் மிக விரும்பி வாசித்த கதை *"அப்பா*". அப்பாவின் அன்பு மற்ற இரு குழந்தைகளுக்கும் ஓரளவேனும் கிடைக்க மூன்றாவதாய் பிறந்த பெண் குழந்தையான தனக்கு கிடைக்காத ஏக்கத்தினை மரணப்படுக்கையில் தந்தை கிடக்கும் தருவாயில் கடித வடிவிலமைந்த இலக்கியம் தான் *அப்பா*. அதிலும் *"போங்கப்பா எனக்கு உங்கள இப்பவும் பிடிக்கல"* என்று வெறுப்பின் உச்சத்தில் ஒரு பெண் கூறுவதென்றால் அவள் மனம் பிறந்தது முதல் எத்தனை துயரப்பட்டிருக்கும் என்று அறிய முடிகிறது. இந்த சிறுகதையை வாசித்த பின் என் அப்பா என் மனதில் முன்னைவிட 1000 மடங்கு உயர்ந்து விட்டார். நிச்சயம் என் அப்பா எனக்கு பெரிய கதாநாயகன் தான்.
2 - பி பிரிவில் படிக்கும் சிறுமி மாலா கூறுவது போல் அமைந்த கதை - யூனிபார்ம். தன் குழந்தையும், உறவினரின் குழந்தையையும் ஒரு பெண் எப்படி பாகுபாடு பார்க்கிறாள் என்பதை இயல்பாய் எழுதிச் செல்கிறார். அத்தோடு படித்து முடித்து வேலையின்றி வீட்டில் இருக்கும் ஆணின் துயர முடிவையும், அதனை அறியா சிறுமியின் விளையாட்டுத்தனமான செய்கைகளையும் கூறிய விதம் அருமை.
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை - இதுவும் ஒரு சிறுகதையின் தலைப்பு தான். உங்களுக்கு புறாக்களைப் பிடிக்கும் தானே? ஆனால், பவித்ராக்கு ஏன் பிடிக்காமல் போனது என்பதை பவித்ராவின் வார்த்தைகளிலேயே கேட்பீர்களாயின் உங்களுக்கும் புறாக்களைப் பிடிக்காமல் தான் போகும்.
எவ்வளவு தான் அட்டகாசமாய் அலங்காரம் செய்து கொண்டு ஒரு திருமணத்திற்குச் சென்றாலும் தன்னையே எல்லோரும் கவனித்தாலும், யாரோ ஒருவர் தன்னை கவனிக்காத போது அதனால் ஏற்படும் ஏமாற்றமும், எப்படியாவது அவர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க வேண்டுமென்ற முனைப்போடு அலங்காரப்பிரியை மெனக்கெடுவதையும் மிக இயல்பாய் காட்சிப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர் லாவண்யா சுந்தரராஜன்.
ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் பெற்று சிறக்கிறது. ஆசிரியரை அவரின் இயல்பான வார்த்தைகளே தாங்கிப் பிடிக்கின்றன. யாதொரு அதீத அலங்காரமுமற்ற எழுத்துகளே நம்மை நூலுக்குள் உள்ளிழுத்து லயிக்கச் செய்கின்றன.
பெண்ணால் பெண்களின் வாழ்வியல் குறித்து எல்லாருக்குமாய் எழுதப்பட்ட நூல் தான் - புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை.
~ *திவாகர். ஜெ* ~
29/03/2020
9789630584

Comments
Post a Comment