Posts

125-பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்

Image
 வாசிப்பு அனுபவம் - 125 நூல் : பிள்ளையாருக்குப் பின்னே மர்மம் ஆசிரியர் : சத்யஜித்ரே வெளியீடு : Books for Children பக்கங்கள் : 120 விலை : ரூ. 80 சத்யஜித்ரே - TNPSC தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருந்த தருணத்தில் பொது அறிவு பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்காக படித்த பெயர் இது. அவருடைய முதல் திரைப்படமான பதேர் பாஞ்சாலி பல விருதுகளைப் பெற்றது என்ற வகையில் தான் சத்யஜித்ரே என்ற பெயரைத் தெரியும். ஆனால், ”பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்” என்ற இந்நூலின் முன்னுரையை வாசிக்கையில் தான், அவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்ல, ஓவியர், எழுத்தாளர், மிகச் சிறந்த துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் வித்தகர் என்பதையெல்லாம் அறிய முடிந்தது.  பொதுவாகவே சத்யஜித்ரே-வின் துப்பறியும் கதைகளின் நாயகன் - ஃபெலுடா. ஆனால், நாவல் முழுவதும் ஃபெலுடாவின் ஒன்றுவிட்ட சகோதரனான தபேஷ் சொல்வது போல தான் எழுதியிருப்பார். இந்நாவலும் ஃபெலுடாவின் துப்பறியும் நாவல் வகையைச் சார்ந்தது தான். ஃபெலுடா , தபேஷ் மற்றும் துப்பறியும் நாவல் எழுதுபவரான ஜடாயு என்கிற லால்மோகன் பாபு மூவரும் துர்கா பூஜையைக் காண்பதற்காக வாரணாசிக

என்னுயிரும் நீயல்லவோ - 124

வாசிப்பு அனுபவம் - 124 நூல் : என்னுயிரும் நீயல்லவோ ஆசிரியர் : பாலகுமாரன் வெளியீடு : விசா பப்ளிகேஷன்ஸ் பக்கங்கள் : 384 விலை : ரூ. 250 *இந்த 2020 ஆம் ஆண்டில் நான் வாசித்து பதிவெழுதும் ஐம்பதாவது புத்தகம் இது.* மேலும், என் மனைவி எனக்கு அன்பளிப்பாய் வழங்கிய நூலுமாகையால் இந்நூலை வாசிக்கத் தொடங்கையிலேயே உள்ளுக்குள் ஒரு இனம்தெரியா ஒரு புத்துணர்ச்சி.😊 நூலின் தலைப்பும் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாய் இருந்தது. நாவலும் அத்தகைய தன்மை வாய்ந்ததே. நூலானது, என்னுயிரும் நீயல்லவோ, அடுக்கு மல்லி, நீ பௌர்ணமி ஆகிய மூன்று நாவல்களைக் கொண்டது. நாற்பது வயதான நாச்சியப்ப செட்டியார் பதினெட்டு வயதேயான பகவதியை இரண்டாந்தாரமாய் திருமணம் செய்து கொண்டு கேரள எல்லையில் இருக்கும் போடிமேட்டில் தனது ஏலக்காய் தோட்டத்திற்கு அழைத்து வருவது முதல் தொடங்குகிறது நாவல். நாச்சியப்பனின் முதல் மனைவியான ஆச்சிக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லையாகினும், கணவனுக்காக ஒப்புக்கொண்டாள். பகவதிக்கும், ஆச்சிக்கும் அதிகமாய் தொடர்பில்லையெனினும் ஆச்சியின் உயர்குணம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. மனிதர்களில் அனைவரையும் அனுசரித்து

நெடுங்குருதி - 123

Image
 வாசிப்பு அனுபவம் - 123 நூல் : நெடுங்குருதி ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் வெளியீடு : தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 472 விலை : ரூ. 500 பசுபதி மே.பா. ராசாக்காப்பாளையம் என்றொரு தமிழ் திரைப்படம். அதிலொரு காட்சியில், பசுபதியின் அம்மா விவேக்கின் கையில் ஒரு பெரிய களி உருண்டையைக் கொடுத்ததும் ”இதை எங்கேயிருந்து சாப்பிட ஆரம்பிப்பது?” என்று கேட்பார். அண்ணே, இப்படி சாப்பிடணுமாக்கும் என்று பசுபதி சொல்லிக் காட்டிய பின் விவேக் சாப்பிட்டதும் அதன் ருசியின் அவரையறியாமல் கண்கலங்கிப் போவார். அதுபோல் தான் ஆறாண்டுகளுக்கு முன்  திரு. எஸ்.ரா. அவர்களின் நெடுங்குருதி என்ற இந்நூலை மேல் அட்டை இல்லாமல் சென்னையின் ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கிய போது எஸ்.ரா. அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது. இவ்வளவு தடிமனான புத்தகம் 50 ரூபாய்க்கு கிடைக்கிறதே என்று வாங்கியது தான். வாசிப்பின் ஆரம்ப வாயிலில் இருந்த நாட்கள் அவை. எவை சலிப்பேற்படுத்தாமல் வாசிக்க ஏற்றவை? சிறுகதைகளா? நாவலா? கவிதைகளா? முதலில் இவ்வாறெல்லாம் வகைகள் இருக்கின்றன என்றும் கூட சரியாய் தெரியாத ஆரம்ப நிலையது.  ஆனால், முதன் முதலாக எஸ்.ரா. அ

121 - அப்பா பிள்ளை அம்மா பிள்ளை - கி.ரா.

Image
  வாசிப்பு அனுபவம் - 121 நூல் : அப்பா பிள்ளை அம்மா பிள்ளை ஆசிரியர் : கி. ராஜநாராயணன் வெளியீடு : அன்னம் பதிப்பகம் பக்கங்கள் : 141 விலை : ரூ. 65 மலர்களிலிருந்து தேனினை உண்ட வண்டு அந்த மதுவின் மயக்கத்திலேயே நாள் முழுவதும் கிறங்கி கிடப்பதற்கு சமானம் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா. அவர்களின் எழுத்துகளை வாசிப்பது. வாசிக்கையிலும் வாசித்து முடித்த பின்னும் நம்மை ஒரு வித மாய போதைக்குள்ளே சிக்கி மீண்டு வர இயலாது அதைப் பற்றிய சிந்தனையோடே அடுத்து வரும் பொழுதுகளை கழிக்க வைக்க கி.ரா. அவர்களால் மட்டுமே முடியுமென்ற வார்த்தைகளில் எள்முனையளவும் மிகையில்லை. 1970-80 களில் பல்வேறு இதழ்களில் கி.ரா. எழுதிய 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் முதல் சிறுகதை ”வால்நட்சத்திரம்”.  பெண் பிள்ளைகளின் உடலியல் ரீதியான வளர்ச்சியை - நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிறுமி என்ற பருவத்திலிருந்து பெரிய மனுசியாய் அவர்கள் கண்ணிமைக்கும் நேரமாய் தோன்றக் கூடும் பொழுதினில் மாறக் கூடிய மாயத்தினை இச்சிறுகதையில் கூறியிருப்பார். அவர்களின் வளர்ச்சியை அவர் இயற்கையோடு ஒப்பிடும் ஒவ்வொரு இடமும் நம்மை சிலிர்க்க வைக்க

120 - விசாரணைக் கமிஷன் - சா.கந்தசாமி

Image
  வாசிப்பு அனுபவம் - 120 நூல் : விசாரணைக் கமிஷன் ஆசிரியர் : சா. கந்தசாமி வெளியீடு : கவிதா வெளியீடு பக்கங்கள் : 320 விலை : ரூ. 150 1998 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் சா.கந்தசாமியின் விசாரணைக் கமிஷன் என்ற இந்நூல். 1940 இல் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 2020 சூலை  31 -இல் இறந்தார். தங்கராசு - ருக்குமணி என்ற கணவன் மனைவியின் வாழ்க்கையே விசாரணைக் கமிஷன் நாவலின் கதைக்களம். தங்கராசு யாருடைய வம்பு தும்புக்கும் போகாத தான் உண்டு தன் வேலையுண்டு என வாழும் போக்குவரத்துத் துறை ஊழியர் - நடத்துனர். ருக்குமணி - பள்ளிக்கூட ஆசிரியை. கதை 1970-80 களில் நடப்பதுபோல் அமைந்துள்ளது. கதையில் பெரிய அளவிலான திருப்பங்களோ, திடுக்கிடல்களோ ஏதுமில்லை. ஆயினும், கதைமாந்தர்களுக்கிடையிலான உரையாடல்களின் வாயிலாக நாவலினை சலிப்பூட்டாமல் நகர்த்திச் செல்கிறார். மனிதர்களின் மன இயல்புகளையும், தேவை கருதியே நட்பு பாராட்டும் உறவுகளையும், ஆபத்திற்கு உதவும் தோழமைகளையும் அடையாளம் காட்டுகிறார். நாவலின் மையப்புள்ளியாக தங்கராசு-ருக்குமணிக்கு அடுத்தபடியாக அக்கால அரசியலும் இடம்பெறுகிறது. மும்மொழிக் கொள்கை, தமி

119 - பள்ளம் - வாசிப்பு அனுபவம்

Image
  வாசிப்பு அனுபவம் - 119 நூல் : பள்ளம் ஆசிரியர் : சுந்தர ராமசாமி வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள் : 79 விலை : ரூ. 100 சுந்தர ராமசாமி அவர்களின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து சிறுகதைகளும் 1970-80 களில் வெளிவந்தவை. கதைகளுக்கு காலம் ஒரு எல்லைக்கோடா என்ன? இப்போதும் நம் சமகாலத்திற்கும் பொருந்துவனவாய் அமைந்துள்ள தொகுப்பினை கொண்ட நூலென்று இதனைக் கூறலாம். முதல் சிறுகதையான, *”ரத்னாபாயின் ஆங்கிலம்”* - தன் கௌரவத்தினை மேம்படுத்திக் காண்பிப்பதற்காக தன் தோழியிடம் தான் பகட்டாய் வாழ்வதாய் காட்டிக் கொள்ளும் ரத்னாபாய் அதனாலேயே பொருளாதார ரீதியாய் எவ்வளவு சிரமப்பட நேரிடுகிறது என்பதனை படம் பிடித்துக் காட்டுகிறது. இன்றைக்கும் நம்மில் பலரும் இப்படித்தான் - பகட்டான வாழ்வு வாழ்வதாய் அடுத்தவர்களிடம் காட்டிக் கொள்வதற்காக தேவையற்ற - அத்தியாவசியமற்ற பொருட்களையெல்லாம் வீட்டில் குவித்து வைத்து அதனால் படும் அவஸ்தைகளை அனுதினமும் நேரில் கண்டும் அனுபவித்தும் தான் வருகிறோம் அல்லவா? இச்சிறுகதை தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை என்றால் அது நிச்சயம் இரண்டாவது

118 - கல்வி எனப்படுவது...

Image
 வாசிப்பு அனுபவம் - 118 நூல் : கல்வி எனப்படுவது... ஆசிரியர் : லதா ராமகிருஷ்ணன் வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பக்கங்கள் : 24 விலை : 15 நம்மிடம் யாரேனும் இந்த தலைப்பினை - அதாவது - ”கல்வி எனப்படுவது...” என்ற தலைப்பினைக் கொடுத்து ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் நம்மில் பெரும்பாலானோர் கல்வியைக் குறித்து எழுதத் தொடங்குகையிலேயே மதிப்பெண், தேர்ச்சி என்பது குறித்தே எழுதுவோம் அல்லவா? ஒருவேளை இன்றைய சூழ்நிலையில் எழுதும் கட்டுரையாயின் புதிய தேசிய கல்வி கொள்கையையும், அதன் சாதக பாதகங்களையும் சேர்த்தே எழுதுவோமாய் இருக்கும்.  ஆனால் இந்நூலாசிரியர் இவற்றையெல்லாம் தாண்டியும் சிந்தித்திருக்கிறார். இச்சிறுநூல் அதனாலே தனிகவனம் பெறுகிறது.  ”கற்றது கையளவு, கல்லாதது உலகளவு“ என்பார்கள். இது நம் கல்வித்துறைக்கும் மிகவும் பொருத்தமானது. இன்றைய உலக நாடுகள் தங்களுடைய பாதுகாப்புக்கென ஆயுதங்கள் வாங்குவதில் செலவழிக்கும் தொகையோடு ஒப்பிட மக்களுக்கு கல்வி கற்பிக்கவென ஒதுக்கும் நிதியின் அளவு பெரும்பாலும் கணிசமான அளவு குறைவாகவே இருப்பதாக” கூறி நூலினைத் தொடங்கும் ஆசிரியர்,  மனிதனின் வலிமையான ஆயுதமான கல்விக்கு அத